பக்கம்:பாற்கடல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

199


“சுந்தரம் சுப்ரமணியனோடே கார்த்திகேயனையும் அனுப்பறேன். அங்கே ஒருத்தருக்கொருத்தர் துணையாக ஒழுங்காகப் படிக்கட்டும்."

“என்னப்பா நீங்கள் சொல்லணுமா? கண்டிப்பாகக் கார்த்திகேயனை கவனிச்சுக்கிறேன்.“

“சம்பளம் வந்ததும் முதல் நினைப்பு உனக்கு லால்குடியாத்தான் இருக்கணும். மணியார்டர் பண்ணிட்டு அப்புறம் மற்றதை கவனி. இந்த மாசக் கடைசியில், உன் தாத்தாவுக்குத் திவசம் வரது அரிசிக்காரி யோகாம்பாளுக்குப் போன மாஸமே பாக்கி நின்னுபோச்சு.“

‘லக்ஷ்மி ஆசைநாயகிக்கு மாதம் தவறாமல் செலுத்தற கப்பத்தில் increment கேட்கிறாளா? சப்தரிஷி சம்பாதிக்க ஆரம்பிச்சா அவளுக்குத்தானே முதல் பங்கு!’ என்று நினைத்துக்கொள்வேன். வாய்விட்டுச் சொல்ல முடியுமா என்று அண்ணா எங்களிடம் சொல்வார்.

ஆகவே, இந்த வரலாற்றில் தன் முதல் வெற்றிப் பிரவேசத்தில், தன் இல்லத்தரசியாக, அம்மாப்பெண் பெங்களூருக்கு வருகிறாள். கூடவே தம்பிமாரும் குட்டி மைத்துனனும், அனுமார் அண்டையிலே காவல், பரதன் பக்கத்திலே காவல், சத்ருக்னன் வாசலில் காவல்.

-சே, நான்தான் சமயம் கிடைத்ததென்று வேடிக்கை பண்ணுகிறேன். அம்மா, அண்ணா இருவருமே இது விஷயத்தில் ஒருமித்துத்தான் சொல்கிறார்கள்.

“தனியாயிருக்க வேணும், தேனிலவு அநுபவிக்க வேணும் என்கிற எண்ணம் எங்களுக்குக் கனவில்கூடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/205&oldid=1534308" இலிருந்து மீள்விக்கப்பட்டது