பக்கம்:பாற்கடல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

211


உஷ், மூச் - விஷயம் தெரிந்தால் அப்படியே இறக்கி விட்டு விடுவான்கள்.

அவள் சோதனையில் இது ஒரு விதம், சோதனையிலேயே சோதனை முயற்சி.

புயல் கடலில் உருவாகிறது. அலைகள் மதில்கள் உயரம் எழுகின்றன. மதில்கள் உடைந்து சரிகின்றன. ஒவ்வோர் அலையும் தனித் தனிக் கடலாகிறது. அலை நடுவே ஓடம் சாய்கிற சாய்வில் கவிழ்ந்துவிடும் போல் ஒருக்களிக்கிறது. கவிழ்ந்தாலே தேவலை, ஆனால் கவிழவில்லை. தத்தளிக்கிறது.

நான் கடலில் மட்டும் இல்லை. உன் வயிற்றின் உள்ளும் இருந்தேன். உன் வயிறு சாதாரணமா? கடலினும் பெரிது. அங்கேதான் எனக்கு ஒளிவிடம், கடலிலும்கூட.

இதுகாறும், பௌர்ணமியின் நடுநிலவில், அலை ஜரிகைகள் மிதக்கும் கடலின் கருநீலப் புடவையுள் ஒளிந்த காற்றின் வீக்கத்தில் களியாட்டம் கண்டிருந்தாய். இப்போது என் சீற்றம் பார். என் சீற்றம் மட்டும்தான் உயிர். ஆனால் அதற்குள் அதன் விளைவைப் பார்.

அழகிய அந்தி மந்தாரம் காட்டிய மேகங்கள்தாம் இப்போது உடைப்புக் கண்டு கொட்டுகின்றன. பெரும் பெரும் மழைத் தூறல்கள் சாட்டைகள், நெடும் நெடும் தூலங்கள், உருவிய ராக்ஷஸ வாள்கள், பாம்பு வால்கள், சில்லிப்பே, நெருப்பினும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் விளாசுகின்றன, விழுகின்றன. 'சொடேர்! சொடேர் உருவி உருவி அடிக்கின்றன. துளைக்கின்றன. கூடவே விதியின் விளையாட்டில் சேர்ந்துகொண்ட இந்த முக்கூடலில், அலைகடல் படும் பாடில், அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/217&oldid=1532760" இலிருந்து மீள்விக்கப்பட்டது