பக்கம்:பாற்கடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ரு சமயம்.

அயோத்யா மண்டபம்.

ஸ்ரீராமநவமி உத்ஸவம்.

மதுரை சோமு.

களை கட்டியாச்சு. உருப்படிகளின் போக்கில் சபையோரையும் பக்க வாத்யங்களையும் தன்னுடைய ப்ரத்யேக பாணியில் ஏதோ ஒரு பாட்டுக்கு ஆவலைத் தூண்டிவிட்டு (என்னுடைய சொந்த ஆசை, மதுரையை அரசாளும் மீனாகூழி மாநகர் காஞ்சியில் காமாக்ஷி" வராதா? கானடாவில் கம்பீரமாய்த் தேர் அசையும்) சடக்கென்று, “லொகஸ"சகா ம்ருதங்க தாளமு’ என்று எடுத்தாரே பார்க்கலாம்! தொடையைத் தட்டிக் கொண்டே எல்லாரும் கேட்க, கரகரத்த குரலில்,

“நல்ல பாட்டு, தானாகவே வாயிலிருந்து குதிச்சிடிச்சி” அன்று அந்தப் பாட்டு சக்கைப் போடு.

அதுபோல, இத்தோடு இதுவும் சேர்ந்ததே. ஆனாலும் இப்போ ஒரு இடைமறிப்பு. 'அமுதசுரபி'யின் முப்பத்து நான்காவது ஆண்டு பிறந்த விழாவில் கலந்துகொள்வோம். என் பல்லவி: “பெரியோரைப் புகழ்வோம்.”

அப்போதுதான் நாலுபேர் கண்ணோட்டத்தில் என் எழுத்து பட்டுக்கொண்டிருந்த சமயம். கண்ணைத் தடுத்து, கவனத்தையும் நிறுத்திய சமயங்களும் நேர்ந்து கொண்டிருந்த சமயம், அப்போ குடும்பம் திருவல்லிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/22&oldid=1532912" இலிருந்து மீள்விக்கப்பட்டது