பக்கம்:பாற்கடல்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

221


பிறகு இப்போது 'பாற்கடல்' தொடர் கட்டுரை வெளிவரத் தொடங்கி, முதலிதழில் அவர் சித்திரத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்தித்ததும் எனக்கு என் பழைய நண்பனைப் பார்க்கும் சந்தோஷம். அவருடைய அலங்கார வேலை (Decorative work) எப்பவுமே சிறப்பாக இருக்கும். தேவர்களும் அசுரர்களும் மலையைக் கட்டி இழுக்கிறார்கள். பழைய ஓவியம் பார்ப்பது போல எனக்கு ஒரு பிரமை தட்டிற்று. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் தவிர, ஸுபாவின் துணுக்குச் சித்திரங்கள் துணுக்குச் சித்திரங்கள் அல்ல) ஒரு 'ஸ்பெஷாலிட்டி'யாக நான் கருதுகிறேன்.

ஈதெல்லாம் இருக்கட்டும். அல்லது போகட்டும் - இவையெல்லாம் ஸுபா பாணியில், அவரிடம் எதிர் பார்க்கக்கூடியதுதான்.

முன் அத்தியாயங்கள் ஒன்றில் குண்டிலினி சக்தியின் விழிப்பைப் பற்றி எழுதியிருந்தேன். தபாலில் வந்ததும், அந்த இதழைப் பிரித்ததும், தற்செயலாக அது திறந்தது பாற்கடல் தொடங்கும் பக்கத்தில். எனக்குச் 'சுரீல்' என்றது. ஸர்ப்பம் பக்கத்திலிருந்து பிதுங்கிச் சீறிற்று குண்டிலினியின் விழிப்பையே படமாக்கி யிருந்தார்.

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தவுடன் பால், சத்தும் சக்கையுமாகப் பிரிவது போல, ஸுபாவின் மேல் அபிமான எண்ணம் தனிப்பிரிந்து, அவர் இழைத்திருக்கும் சித்திரம், ‘என்னை எனக்காகவே பார்!’ என்று என் காதைத் திருகி என் முகத்தைத் தன் பக்கம் திருப்புவது போல் ஓர் உணர்ச்சி துவக்கத்திலிருந்து பென்சிலைத் தூக்காமல் ஒரே கோட்டில், பிசிரில்லாமல், அதிமந்திரத்திலிருந்து ஒரே தம்மில் மேல் பஞ்சமத்துக்குப் போனதுபோல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/227&oldid=1534329" இலிருந்து மீள்விக்கப்பட்டது