பக்கம்:பாற்கடல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

229


”உன் பிள்ளை லக்ஷணத்தைப் பார்!” அம்மாவைக் கடிக்கிறார். அம்மா சிரிக்கிறாள். “குழந்தையைத் தலையில் அடிக்காதேங்கோ, ஆகாது.”

ஒரு பெரிய ஸ்டேஷனில் இறங்குகிறோம். வேறு ரெயில்களும் வருகின்றன, போகின்றன. பிரயாணிகள் இறங்குகிறார்கள். ஏறிக்கொள்கிறார்கள். ஒரே ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. பார்க்கப் பார்க்க அலுக்கவே இல்லை.

“என்ன அமிர்தகடேசா, செளக்கியமா?” அம்மா தான் விசாரிக்கிறாள். கட்டை குட்டையாக, கறுப்பாக ஒருவர் எங்களை நோக்கி வந்து, ஆசையுடன் என் கையைப் பிடிக்க முயல்கிறார். நான் கையை இழுத்துக் கொள்கிறேன்.

”சித்தப்பாடா”

”ஜட்கா காத்திண்டிருக்கு. நீங்கள் முன்னாலே போங்கோ - இந்தப் பெரிய சாமானை எல்லாம் ஏத்திண்டு பின்னாலே நான் வரேன்.”

அண்ணாவும் தம்பியும் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். பேச்சில் இடையில் அண்ணாவின் கேள்வியில் ஏதோ படுகிறது. ”இங்கு நிலைமை எப்படி?”

”கவலையேபடாதே - ஒரு பள்ளிக் கூடம் இல்லாட்டா இன்னொண்ணு. Muslim High Schoolஇல் இப்பவே ஒரு Vacancy இருக்காம் - நமக்குத்தான். அந்தச் சகவாசம் நமக்குப் பிடிக்கணும்.”

”எதோ ஒண்ணு, முன்னால் தொத்திக்கணும். அப்புறம் தாவிக்கலாம். வேலையில்லாமல் ஒரு க்ஷணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/235&oldid=1534338" இலிருந்து மீள்விக்கப்பட்டது