பக்கம்:பாற்கடல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

லா. ச. ராமாமிருதம்


அப்போதைய நினைவுகளை நினைத்துக் கொண்டேனா? நினைத்துக்கொள்ள முடியுமா? முடியாது என்பதைக் சொல்லவும் வேண்டுமா?

சம்பவம் நேர்ந்தபோது, நேர்ந்தவை. நினைவு ஏற்பாடு, (arrangement) இப்போதைய நிகழ்ச்சி, பின்னோக்கு, அதில் கிடைத்த (அல்லது கிடைத்ததாக நினைத்துக்கொள்ளும்) தெளிவு திருஷ்டி (Perspective) வெளியீடு பாஷை, பிறகு சொந்தத் திருப்பல் (evision) சொந்த editing மூலம் விஷயத்துக்கு முறுக்கேற்றம், ஓசை, கையெழுத்தில் அதற்கு ஒரு தோற்றம், அச்சில் காண் கையில் வேறு அந்தஸ்து (சில சமயங்களில் இதுவே ‘உல்ட்டா' ஆகிவிடுவதும் உண்டு) இடையில் இத்தனை கட்டங்கள், கவனங்கள், கட்டுகள், சூதுவாதுகள் இருக்கின்றன. இத்தனைப் பக்குவங்களுக்கிடையில், விஷய பின்னம், உத்தேச (Intention) பின்னம், என் மமதையின் அதிகப் பாசங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். ஸாம்பார் ரஸமாகிவிடக்கூடாது. ஆனால் Processingஇல் எந்தக் கட்டத்தையும் தவிர்க்க முடியாது. இதில் அசிரத்தை காட்டினால் இத்தனை காலம் பயின்ற எழுத்தின் கலையம்சம் என்னாவது?

பொய் வரக்கூடாது. பொய்மை புகின் அது மைக்கும் குற்றமன்றிப் பண்டத்தில் பழுதில்லை.

'சம்பவங்களை - நேர்ந்தபடி, நேர்ந்த சமயத்தின் பாஷையிலேயே சொல்லாவிட்டால் அவை முழு உண்மை எப்படியாகும்?” என்கிற எதிர்க்கேள்விக்கு பதில் சொல்லச் சக்தி அற்றவனாகிறேன்.

முதலில் சாத்தியமாகவும் எனக்குப் படவில்லை. நான் பூமியில் குழந்தையாக விழுந்ததும் 'குவா குவா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/254&oldid=1533345" இலிருந்து மீள்விக்கப்பட்டது