பக்கம்:பாற்கடல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

லா. ச. ராமாமிருதம்


’அமுதசுரபி’யை மிதக்கவிட்டு, வித்வான் வே. லக்ஷ்மணன் போய்விட்டார். ஆனால் அதன் ஆதவன், அடுத்துவந்து அப்போதிலிருந்து ஆசிரியராகத் திகழும் ஸ்ரீ வேம்பு என்று அடித்துச் சொல்கிறேன். ’குருவும் தாரமும் தலைவிதி’ என்று பழமொழி. பத்திரிகைக்கும் அவருக்கும் தொந்தத்திற்கும், இந்தப் பழமொழிக்கும் என்னைப் பொறுத்தவரை துளிக்கூட வித்தியாசமில்லை. இந்த முப்பத்துமூன்று வருடங்களில், பத்திரிகைக்காக, அவர் கடந்திருக்கும் மேடு பள்ளங்கள், மைல் கற்கள், தாங்கியிருக்கும் சிலுவைக்கு நான் சாக்ஷி. நானும் அவரைப் படுத்தியிருக்கிறேன். ’அமுதசுரபி’ உடன், ஆசிரியராக வேம்பு பிணைந்திருக்கும் கதை அதுவே ஒரு குட்டி அரிச்சந்திர புராணம், ஒரு பாற்கடல்தான். வேம்புவும் ஒரு விடமுண்ட கண்டன்தான்.

கஷ்டங்கள் தீர்ந்தன.

கதாநாயகன் கதாநாயகியை மணந்துகொண்டு பிறகு எல்லோரும் சௌக்யமாக வாழ்ந்தனர், கதை முடிந்தது. கத்திரிக்காய் காய்த்தது, கற்கண்டு இனித்தது,

என்பதெல்லாம் குழந்தையைத் தூங்கப்பண்ணச் சரியாயிருக்கலாம். ஆனால் முடிந்த கதையே கிடையாது. நடுவில் நின்றுபோன கதை உண்டு. ஆனால் முடிந்த கதை கிடையாது. அப்படியென்று ஒன்று இருந்தால் உலகம் எப்பவோ முடிந்துபோயிருக்க வேண்டும். உலகம் அழிந்து போயிற்று என்று சொல்ல ஒருவன் மட்டும் மிஞ்சியிருந்தால் கூட, உலகம் தொடர்கதைதான்.

பேனா என் வயிற்றுப்பிழைப்பு அன்று. நான் அர்ப்பணித்துக்கொண்ட எழுத்தாளன் அல்லன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/26&oldid=1532918" இலிருந்து மீள்விக்கப்பட்டது