பக்கம்:பாற்கடல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

271


ப்ராக்கெட்டுக்குள் இருப்பதற்குக் கோபித்துக் கொள்ளக்கூடாது. அது குழந்தை ராமாமிருதத்தின் கொக்கரிப்பு.

அம்மி எங்கள் வீட்டுள் நுழையும்போதே அவள் முன்னால் நர்த்தனமாடிக்கொண்டு வருவோம்.

“நேக்கு, நேக்கு, நேக்கு.“

“பக்கிப் பொணங்கள்! பனாதைகள்! காணாததைக் கண்டமாதிரி அலையறதுகள்! மானம் இல்லை, வெட்கம் இல்லை, ரோசமில்லை!“

அந்த நாள் தமிழில் அர்ச்சனை இப்படித்தான் போலும்.

வீட்டில் குழந்தைகளே அம்மிப் பெண் குழந்தைகள்தான். அம்மாதான் திட்டுவாள். திட்டிவிட்டு அம்மாவே ரோசப்படுவாள். வேடிக்கையாக இல்லை?

சித்தி வயிற்றில் இன்னும் அன்னம் வைக்கவில்லை. ஆம் அதென்ன பாஷை ?

அம்மியின் கணவனுக்கு ஸ்பென்சரில் வாச்மேன் வேலை. காலை ஏழு, ஏழரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், மாலை ஐந்தரை, ஆறுக்குத்தான் திரும்புவான். கையில் அம்மி கொடுத்த பார்சல் (அவள் அடுப்புக் கதகதப்புக்குக் காரணம்) தெருமுனையில் அவன் தலை மறையும் வரை வாசலில் நின்றுகொண்டு கையை ஆட்டிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் கூட மாறாத, எங்களுக்கும் பார்க்க அலுக்காத சடங்கு.

அபூர்வமாக என்றேனும் மாலையில் சடுதியாக வீடு திரும்பிடில், இருவரும் வாசல் தாழ்வாரத்தில் நாற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/277&oldid=1534365" இலிருந்து மீள்விக்கப்பட்டது