பக்கம்:பாற்கடல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

299


வதுக்களில் லஜ்ஜை கைவிரிப்பு. சீமந்தத்தில் மணப் பலகைக்காக மெனக்கெட்டு வரவழைத்துக் கொள்ளும் வெட்கத்தில் ஏதோ ஒரு பரிதாபம் இல்லை? அதுவும் சித்திக்குப் பிறந்த வீட்டுத் துணையும் இல்லை.

ராச்சாப்பாடு முடிந்தவுடன் குஷி ! குஷி! கதை ! கதை ! எதிர்வீட்டுப் பையன், அண்டை வீட்டுப் பையன்களில் ஓரிருவர், முன்கட்டுப் பையன், நாங்கள் எல்லோரும் சேர்ந்து அப்பாமேல் - அதான் தாத்தா மேல், பூச்சி, வண்டுகள் போல் அசலாகவே மொய்த்துக் கொள்வோம்.

“டேய் ஒரு எட்டுக் கத்தரிக்காய், ஒரு டஜன் வெண்டை, ஒரு நாலு கிழங்கு போடுடா !”

தாத்தா மார்க்கெட் வாங்கவில்லை. அவருடைய உடம்பைப் பிடித்துவிடுகையில், பிடிகள், உருட்டுகள், நிமிண்டல்கள், குத்துகள், புரட்டிவிடுதல்கள் (பேஷ்!) களுக்கு ஸங்கேதப் பெயர்கள். “இன்னிக்கு உனக்கு வலதுகால், இவனுக்கு இடது, அதோ அவனுக்கு, உன் பேர் மறந்துபோச்சு, இந்தக் கை, டேய், யாருக்குடா முதுகு வேணும்?” என்று பங்கு போட்டாகிவிடும்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களிடையே, கதை புறப்படும் ஜரூராக. ஆரம்ப நடைபோட்டு, மெதுவாகி, அப்புறம் கொஞ்சம் சூடு ஆகி, சரியான உயிர் நிலையில் குறட்டையில் நின்றுவிடும். தூங்குபவரைத்தான் எழுப்ப முடியும். இனிமேல் நாளை ராத்திரிக்குத்தான்.

இப்படியேதான் தாத்தாவிடம் நாங்கள் ராமாயணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணத்தில் சில முக்கிய நாயன்மார்களின் வரலாறு, மஹா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/305&oldid=1534417" இலிருந்து மீள்விக்கப்பட்டது