பக்கம்:பாற்கடல்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

327


பண்ணியிருக்கணும்.“ பஞ்சக்கச்சத்துக்கு உடனே மாறி இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, தலையில் கட்டுக்குடுமி, பெரிய புஜங்கள், தொப்பை, கடோத் கஜன், கம்பீரன்.

அண்ணா கைபட்டுக் கரையேறினவர் எத்தனை பேரோ? யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் சாஸ்திரங்கள் சொல்வதை நம்பினால் அந்த மஹானுக்கு மறு பிறப்பே கிடையாது. நாராயணனும் அதேமாதிரிதான். தந்தை வழி மகன்.

ஒருநாள் மாலை அமமாவும் நானும் ஒரு சீப்பு ரஸ்தாளி வாங்கிக்கொண்டு (அண்ணாவின் தாயார் வயசான வளாச்சே! அண்ணா வீட்டுக்குப் புறப்பட்டோம். சும்மாதான், நலன் விசாரிக்க. அண்ணாவின் ஜாகை George town-இல் தம்புசெட்டித் தெருவில் பட்டனவாசம். நாலு குடித்தனத்துக்கு நடுவில்தான்.

போய்ச் சேர்ந்ததும் வீடு பூரா ஏதோ படபடப்பு பரபரப்பு கண்டோம். கூடிக் கூடிப் பேசிக்கொள்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் விழிக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் என்னென்று கேட்பது? ஆனால் சூழ்நிலையில் ஏதோ மின்சாரம். மாடியேறிச் சென்றோம். கீழே விட மாடியில் அண்ணா விடுதிப் பக்கம் கூட்டம் தெரிந்தது. இடித்துப் புகுந்துகொண்டு உள்ளே போனால் –

மொட்டை மாடியில் அண்ணா மலைபோலும் சாய்ந்து கிடக்கிறார். மூடிய கண்கள். அவரை டாக்டர் Stethoscope வைத்துப் பரிசீலனை பண்ணிக்கொண் டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/333&oldid=1534461" இலிருந்து மீள்விக்கப்பட்டது