பக்கம்:பாற்கடல்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

345


காதலுடன் உறவு.

குரு - சீட உறவு.

கடவுளுடன் உறவு.

துணை துறந்து தனிமையுடன் உறவு.

உன்னை நீ அறி எனும் வேட்டையுடன் உறவு.

உறவைத் தேடலிலேயே தேடலோடு உறவு.

பிறவிக்கும் சாவுக்கும் இடையே உனக்குக் கிடைத்த உறவுடன் சமாதானம் அடை.

சமாதானம் அடைவாயாக.

சிந்தனைக்கு இடங்கொடேல்.

சிந்தனையில் இறங்குவதாக இருந்தால், கடைசி வரை - உன் கடைசிவரை அதை ஒரு கை பார்த்து விடத் துணிச்சலுடன் இறங்கு.

கலைஞன் முழு ப்ரக்ஞையுடன் உணரும் தன் விதி இது. சமுத்திரத்தை அதன் எதிர்க்கரைக்கு (?) (!) நீஞ்சத் துணிச்சல்,

எங்கு அவனுக்கு எது, இந்த நீச்சலில் அவன் கண்டானோ, அத்துடன் அவன் ஜலசமாதி. அதுவே அவன் கண்ட கரை. அதையும் அவன் அறிந்திருத்தல் வேண்டும்.

நிற்க. இதோ வாளாடி அத்தை பேச ஆரம்பித்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/351&oldid=1534623" இலிருந்து மீள்விக்கப்பட்டது