பக்கம்:பாற்கடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

31


படவில்லை. வருடத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நடத்த வேண்டியிருக்கும் வைதீகச் சடங்குகளின் செலவு மிச்சம் ஆச்சு!

ஜி. சுப்ரமணிய ஐயர் குமாரத்தி சௌ. கமலத்துக்கும் அமிர்தமய்யர் குமாரர் எல்.ஏ. ஜகதீசனுக்கும் திருமணத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

ஜகதீசனை வக்கீலுக்குப் படிக்க வைக்க வேண்டும். சோதரமாருக்கு வேலை பண்ணி வைக்க வேண்டும்.

இந்த விக்கிரமாதித்த சோதனைகளுக்கு ஐயர் ஒப்புக்கொண்டு, எப்படி நிறைவேற்றினார் என்றால், ஐயர் ஒரு விக்கிரமாதித்தன். அவருடைய சோதனையைக் காட்டிலும் பெரிய வேதாளம் அவரைப் பிடித்துக்கொண்டிருந்ததே! பெண்ணுக்கு எப்படியானாலும் கல்யாணம் நடந்தால் சரி.

ஐயர் உதவியில் தாத்தாவுக்குப் பள்ளிக்கூடத்தில் தமிழ்ப்பண்டிதர் வேலை. ஒரு தம்பிக்கு உப்பு இலாகாவில், இரண்டு பேருக்குப் போலீஸ் டிபார்ட்மெண்டில்.

ஐயாவுக்குத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு ஏவலாளிக்குக்கூட அவர் லாயக்கில்லை; படிப்பு சூன்யம் மட்டும் அல்ல; அதிகாரத்தின் ஒழுங்குக்குப்படியும் சுபாவமும் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/37&oldid=1533009" இலிருந்து மீள்விக்கப்பட்டது