பக்கம்:பாற்கடல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

55


அகிற்புகையின் வியாபகத்தில் உருப் பிதுங்கின ராக்ஷஸம். நெருப்பில்லாமல் புகையில்லை. இந்தக் கங்கு, பரம்பரை அஸ்தியில் எங்கோ செருகிக்கொண்டு, கனன்று கொண்டேயிருக்கும் பரம்பரை ஆஸ்தி. prometheus சொர்க்கத்தினின்று நமக்காக மூங்கில் குழாயில் அடைத்துக்கொண்டு வந்த தீ. எல்.ஐ.சி. சின்னத்தில் ஒரு உள்ளங்கைகளுள் ஏந்தல் காக்கும் குடும்பச்சுடர். ஒலிம்பிக் தீப்பந்தம். அன்றே என் பாட்டி, என்னையும் என் தம்பியையும் செல்லமாக அழைத்த பெரிய தீவட்டி, சின்ன தீவட்டி. மூன்றாவது கண்ணின் திறப்பு. சாவுக்கும் பிறப்புக்கும் இடைக்கோடின் முகடு. இந்த ’நான்’-இல் நான் நான் நான் நான் நான் நான் நான் நான் நான் பல கோடி பிம்பங்களில் நானும் ஒரு பிம்பம். என் ஆரம்பம், அர்த்தம், முடிவு, நோக்கம், பெருமை, இதுவேதான் நான்’ எனும் என் வெளியீடல்இதுவே அம்முவாத்து அகந்தை அவள் எங்களவள். ஆகையால் மற்றதெல்லாம் எங்களுக்கு திரணமாத்திரம் எனும் ஒரு ஸர்வ தோரணை மஹா பிகு.


ஸத்யோஜ்யோதிஷி
    ஜிஹோமி ஸ்வாஹா;
தாராமல் இருப்பாளோ
    அவள் எனன
சத்தியம் மறந்தவளோ ?
    பூம் பூம் பூம் ஸ்வயாகாரத்தின்
சங்கநாதம்.

இருங்கள், இருங்கள், பொறுங்கள், மூச்சிறைக்கிறது. இருபத்துஐந்து வருடங்களுக்கு முன்னின் நினைவுக் கூட்டல் அல்லவா? கூட்டவே வேண்டாம். அன்றின் அழுத்தல் இன்னும் குறையவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/61&oldid=1533292" இலிருந்து மீள்விக்கப்பட்டது