பக்கம்:பாற்கடல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

லா. ச. ராமாமிருதம்

கண்டேன்? யாருக்குமே கிட்டாத பாக்கியம் உனக்குக் கிட்டியும், எட்டி உதைச்சுட்டே. இனிமேல் இந்தக் குடும்பத்துக்கு விமோசனம் உண்டோ?”

ஐயா படுக்கையை விட்டு எழுந்திருக்க மாதம் சென்றது. பிறகு அவர் வேலைக்குத் திரும்பவில்லை. திரும்பவும் பழையபடி பழைய ஐயாதான். வீட்டில் வெல்லப்பானையைத் தூக்கிண்டு ஓடிண்டு, மாற்றான் கொல்லையைக் கொள்ளை அடிச்சுண்டு, அடிச்சதைப் பசங்களுடன் பங்கிட்டுண்டு, திரும்பவும் வெறுங்கையை வீசிண்டு, சிரிச்சுண்டு, சீறிண்டு, வெகுளியா, எல்லோருக்கும் வேண்டியவராய், தனக்கு உதவாக்கரையாய் - தன் வேளை வந்து சாகிறவரை அப்படியே...

'எனக்கு - என்னுடையது' எனும் தனிச் சொந்தங்களிலிருந்து விடுபட்டு, அதனாலேயே எல்லாமே தனக்குச் சொந்தமாகி, பொறுப்பற்ற, கவலையற்ற அதுபோன்ற வாழ்க்கை கிட்டல் அரிது. பொறாமைக்கு உரியது.

ஞானசித்தி இலாது, கௌபீனத்தோடு மட்டும், தரிசன சித்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/78&oldid=1533312" இலிருந்து மீள்விக்கப்பட்டது