உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

43



வருபவற்றைத் தீக்குறிகளால் அறிந்து விழவு நோன்பு முதலிய சமந்தியால் (சாந்தியால்) தடுத்தலும், மக்களால் வருபவற்றை அவர் குணம், குறிப்பு (இங்கிதம்), தோற்றம் (ஆகாரம்), செயல், சொல் முதலியவற்றா லறிந்து நால் வகை ஆம்புடைகளுடன் ஒன்றால் தடுத்தலும் ஆம். குறிப்பு உறுப்பின் தொழில்; தோற்றம் உடம்பின் பார்வை வேறுபாடு. மகிழ்வன செய்தலாவது, முற்றூட்டும் பட்டமுமளித்தலும் கண்ணியமாக நடத்துதலும் கூறிய அறிவுரையைக் கடைப்பிடித்தலுமாம்.

"கடவுளரையுந் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்தி"

என்று சிறுதெய்வ வணக்கத்தையும்.

"ஆகவே, புரோகிதரையும்.... கூறியவா றாயிற்று"

என்று பிராமணப் பூசாரியரையும், பரிமேலழகர் இங்குக் குறித்திருப்பது தவறாம்.

தானம் என்னுஞ் சொல் தமிழேயாயினும், அது அறப்புறங்கட்குக் கொடுப்பதையே சிறப்பாய்க் குறித்தலின் இங்கு விலக்கப்பட்டது. 'உறாஅமை' இசைநிறை யளபெடை.

443. அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

(இ-ரை.) பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்; அரியவற்றுள் எல்லாம் அரிதே - அரசர் பெறக்கூடிய அரும்பேறுக ளெல்லா வற்றுள்ளும் அரியதாம்.

ஏகாரம் தேற்றம்.

444. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.

(இ-ரை.) தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர்வழி நின்றொழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்குரிய வலிமைகளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம்.