பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 175 — "தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு’ 'கமழும் உன் தமிழினை உயிரென ஒம்பு; காணும் பிறமொழிக ளோவெறும் வேம்பு; நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு; நம்உரிமை தனக் கடித்ததப் பாம்பு!” "தனித்தமிழில் இந்நாட்டுத் தக்கபுதுக் காப்பியம்நன் னுரல் இயற்ற நினைப்பாரேல் நம்புலவர், நிலவாவோ , ஆயிரநூல் தமிழகத்தே' "அறிவிப்புப் பலகையெலாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி அச்சொல் குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையுமாயின் - மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?" 'துரக்கத்தில் பிதற்ற நேர்ந்தால் து.ாய்தமிழ் பிதற்றும் என்வாய்!” தமிழ்வளர்ச்சி பற்றியவன் சாற்றுகின்ருன் கேளிர்! தமிழல்லால் முன்னேற்றம் சிறிதுமில்லை என்பான்! நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனும் தமிழ்அல்லால் நம்முன்னேற்றம் அமையாது: சிறிதுமிதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம் - இன்பத்தமிழ் குன்றுமேல்-தமிழ் நாடெங்கும் இருளாம் மொழியென்ருல் உயிரின் நரம்பு-நம் முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு'