பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

பிரதாப முதலியார் சரித்திரம்

அனுப்பினான். உடனே மூத்தவன் சமுசார சகிதமாய்ப் புறப்பட்டுத் தம்பியிடம் வந்து சேர்ந்தான். தம்பியைப் பார்த்தவுடனே தமையன் கட்டிக்கொண்டு “தம்பி! பிறருக்கு வெட்டின குழி தனக்கே வந்து லபிப்பதுபோல் உனக்கு நான் செய்த தீங்கு எனக்கே வந்து லபித்துவிட்டது. உன்னுடைய பாகச் சொத்தை உனக்கு நான் கொடுத்திருப்பேனானால் மற்ற ஸ்திதிகளை வைத்துக்கொண்டு நான் க்ஷேமமாய் வாழ்ந்திருப்பேன். உன்னுடைய பாகத்தை வஞ்சிக்க நினைத்துச் சொத்துகளை யெல்லாம் நான் பராதீனஞ் செய்தபடியால் அந்தப் பராதீனமே நிலைத்து என்னுடைய ஸ்வாதீனம் மாறிப்போய் விட்டது. யுஆடவன் செத்த பிறகு அறுதலிக்குப் புத்தி வந்ததுரு என்பது போல் சொத்துக்களெல்லாம் போன பிறகு எனக்குப் புத்தி வந்தது அப்பா!” என்று சொல்லி அழுதான். தமையன் செய்த துரோகங்களைத் தம்பி எள்ளளவும் நினையாமல் அவனுக்குச் சர்வோபசாரங்களுஞ் செய்தி தாசானு தாசனாக நடந்தான். ஆனால் அவனுடைய இல்லாள் கொழுந்தனிடத்தில் துன்பப்பட்டவளானதால் அவள் தன் புருஷனுக்குத் தெரியாமல் கொழுந்தனைக் காணும்போதெல்லாம் கடுகடுத்துக் கொண்டு வந்தாள்.

சில நாளாயினபின், தமையன் ஊருக்குப் போகவேண்டுமென்று உத்தரவு கேட்ட படியால், கனிஷ்டன் தன் பத்தினிக்குத் தெரியாமல், பெட்டியைத் திறந்து, நுறு தங்க நாணயங்களை யெடுத்து, தமையன் கையிற் கொடுத்து, அவற்றை மூலதனமாக வைத்துக்கொண்டு வியாபாரஞ் செய்யும் படி யாகவும், இன்னும் வேண்டுங் காரியங்களுக்கு எழுதும்படியாகவுஞ் சொல்லி, தமையன் பத்தினிக்கும் பிள்ளைகளுக்கும் வஸ்திராபரணங்கள் கொடுத்து அனுப்பினான். அவர்கள் போனபிறகு இளையவ னுடைய பெண்சாதி பெட்டியைத் திறந்து பார்க்க, தங்க மோகராக்களைக் காணாமையினால், புரு-