பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

பிரதாப முதலியார் சரித்திரம்

களைத் தண்டிக்கிறதற்கு ஒரு தெய்வமும், அவர்களை உபாதிக்கிறதற்கு ஒரு நரகமும் அவசியமென்றும் தான் செய்த துரோகங்களை க்ஷமித்துத் தன்னைக் காப்பாற்றின தாய் தந்தையர்களுக்குத் தகுந்த சன்மானம் இந்த உலகத்தில் இல்லாதபடியால், அவர்களுக்காக ஒரு மோட்சமும் அகத்தியம் வேண்டியதென்றும் ஆகையால் தெய்வமும், நரகமும், மோட்சமும் உண்டென்பது சத்தியமென்றும் ஒப்புக்கொண்டான்.




30-ஆம் அதிகாரம்
தேவராஜப் பிள்ளைக்குக் கனகசபை சொந்தப்
புத்திரனா என்னும் விசாரணை—
சிரித்தவர் அழுவார்—அழுதவர் சிரிப்பார்

கவர்ன்மெண்டாருக்குத் தேவராஜப் பிள்ளை எழுதிய மனுவுக்கு எப்போது உத்தரவு வருமோவென்று நாங்கள் சதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் குதிரைத் தபால் வழியாகக் கவர்ன்மெண்டாருடைய உத்தரவு வந்து சேர்ந்தது. அதைத் தேவராஜப்பிள்ளை ஆவலாக வாங்கிப் பிரித்து வாசித்தார். அவருக்குக் கனகசபை சொந்தப் பிள்ளையா அல்லவாவென்று விசாரிக்கும்படி, மூன்று துரைமார்களை விசாரணைக் கர்த்தர்களாக நியமித்திருப்பதாகவும், அவர்கள் முன்பாக சாக்ஷி சாதனங்களுடன் போய்ச் சங்கதிகளைத் தெரிவித்துக் கொள்ளும்படியாகவும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய அபிப்பிராயப்படி தீர்மானம்