பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxix

கற்க வசதியாக, 1869இல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளியொன்றை மாயூரத்தில் தன் சொந்த முறையில் தொடங்கி நடத்தி, பின்னர் தான் நகர மன்றத் தலைவரானபோது அதனை நகராட்சியின் பொறுப்பில் ஒப்படைத்தார்.

இங்ஙனம், பெண்கள் முன்னேற்றத்திற்காக இவர் அமைத்த அடிப்படையின் மீதுதான். திரு.வி.க., பாரதியார் போன்ற பிற்காலப் பெரியோரின் தொண்டுகள் தூண்களாக எழுத்து, இன்று மாதர் முன்னேற்றம் ஒரு பெரும் மாளிகையாகி நிற்கிறது.

தமிழில் புதினங்கள் இயற்றுதல் :

ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளில் உரைநடையில் அமைந்த புதுமைக் கதைகள் இயற்றப்பட்டிருப்பதையும் தமிழ மொழியில் அத்தகைய கதைகள் தோன்றாமையையும் வேதநாயகர் வேதனையோடு நோக்கினார். தமிழ் உரைநடை, பண்டிதர் நிலையிலிருந்து பாமரர் நிலைக்கு வர அத்தகைய கதை நூல்கள் பெருக வேண்டியதன் தேவையையும் எண்ணினார்.

இதனைத் தாமே செய்து, பிறருக்கும் வழிகாட்ட எண்ணினார். நீதி நூலிலும், பெண் கல்வி முதலிய பிற நூல்களிலும் தான் வெளியிட்டிருந்த அரிய கருத்துக்களைக் கதை மாந்தர்களின் பண்புகளாக்கி ஒரு புதினக் கதையைப் புனைந்தார். அதனைப் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்ற பெயரில் 1879இல் வெளியிட்டார். அதனை இயற்ற தேர்ந்த காரணத்தையும் நோக்கத்தையும் அதன் முதற் பதிப்பிற்கு எழுதிய ஆங்கில முன்னுரையில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அதனைப் போன்ற ஆனால் அளவில் சற்று சிறிய புதினம் ஒன்றையும் எழுதி, “சுகுண சுந்தரி“ என்ற பெயரில் 1887 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

இவையிரண்டுமே, தமிழ் மொழியில் அமைந்த முதல் புதினக் கதைகளாகும். இன்று தமிழில் உரைநடையில்