பக்கம்:பிறந்த மண்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 137. தான் மாயம், மந்திரம், வசியம் இருக்கிறதோ! இன்றுவரை அவள் வலையில் சிக்காமல் போன ஆள் கிடையாது. இப் படித்தான் விவிட்டிங் கார்டைக் கொடுத்து வீட்டுக்கு வந்து சந்திக்குமாறு முதலில் அழைப்பாள். படுசூன்யக்காரி அவள். மாந்திரிகம், பில்லி, சூனியம்-போன்றவையும்கூட. அவளுக்குத் தெரிந்திருக்குமோ என்று எனக்கு அந்தரங்க மாக ஒரு சந்தேகம் உண்டு . முதல் நாள் அவள் வீட்டுக்குப் போனவன் மறுநாளும், போவான். அதற்கு மறுநாளும் போவான். தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பான். அதன் பின்னர். அவனை யாராலும் தடுக்கமுடியாது. கடைசியில் அவனை முற்றிலும் தன் ஆளாக மாற்றிக்கொண்டு விடுவாள்.அவள். பிரமநாயக கத்தால் அவருடைய கையாளாக வேலைக்கு வந்தவன். பூர்ணாவின் விளையாட்டுப் பொம்மையாக மாறி அவ ருக்கே எதிரியாகத் தலையெடுப்பது வழக்கம். வேலைக்கு வந்த பத்துபன்னிரண்டு நாட்களில் வந்தவன் எப்படிப்பட்ட வனாக இருந்தாலும் அவன்ைத் தன்னுடைய நாய்க்குட்டி, போல் தன். பின்னாலேயே சுற்ற வைத்துவிடுவாள்அேவள் ஆனால் அவளுடைய வலையில் சிக்கிய ஒவ்வோர் இளைஞனின் முடிவும் ஓரிரு மாதங்களில் பயங்கரமான விதத்தில் வெளியாகும். எனக்குத் தெரிந்து எத்தனை பேர் அப்படி முடிவுகளை அடைந்திருக்கிறார்சள் தெரியுமா? உங்களை மாதிரியே ஓர் இளைஞர்; அவன்ரயும் தமிழ் நாட்டிலிருந்துதான் பிரமநாயகம் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தார். அவருக்கும் திருநெல்வேலிப் ப்க்கம்தான். வேலைக்கு வந்தவர் முழுக்க முழுக்கப் பூர்ணாவின், வ்லை, யில் விழுந்துவிட்டார். இரண்டு மூன்று மாதம் அவள்ோடு 'திரிந்தார். கடைசியில் ஏதோ சித்த்ப்பிரமை மாதிரி வந்து' வாய் பேசவரர்மல், மற்றவர்கள் பேசினாலும் புரிந்து கொள்ளச் சுயநினைவு இல்லாமல் ஒரு மாதம் ஆல்பத்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/139&oldid=597310" இலிருந்து மீள்விக்கப்பட்டது