பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அதற்கெல்லாம் அவன் தந்தை, "சமயம் வரும் - நீ எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையில் பாஸ் செய்...பிறகு நானாகவே அந்த அறையைத் திறந்து உனக்குக் காட்டத் தான் போகிறேன். அதுவரை பொறுமையாக இரு" என்று கூறிவிட்டார்.

ஆனால் இப்போது?

மகன் பிரமாதமாகப் படித்துப் பாஸ் செய்துவிட்டு வந்ததற்காகப் பிள்ளை அகமகிழ்ந்து போனார். பட்டணத்திலிருந்து சேகர் வந்திருக்கிற செய்தி கேட்டு அந்த வட்.டாரம் முழுவதிலுமுள்ள உறவினர்களும் நண்பர்களும் வந்து கூடினார்கள். நாலைந்து வாரங்கள் வரை விருந்து மயமாகவே வீடு அமர்க்களப்பட்டது.

ஒரு வழியாக அந்த அமர்க்களம் ஒய்ந்து, வீடு பழைய நிலைமையை அடைந்தவுடன், கார்த்திகேயனே சேகரை அழைத்துச் சென்று, அவன் ஆவலோடு பார்க்கத் துடித்துக்கொண்டிருந்த அறையைத் திறந்து காண்பித்தார்.

ஆனால் அதைக் கண்டதும்?

சேகர் ஒருகணம் பிரமித்து அப்படியே சிலைபோல் நின்றுவிட்டான். பிறகு, வந்த சிரிப்பை அடக்க முடியாமல், அவன் வாய் விட்டே உரக்கச் சிரித்துவிட்டான்.

ஆமாம்! அந்த அறையில் அவன் பார்க்கத் தவித்தபடி பரபரப்பூட்டும் அதிசயம் ஒன்றும் இல்லாவிட்டாலும், தந்தைக்கு இப்படி ஒரு கற்பனையா? வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்ட அவன் கண்ட காட்சி இதுதான்---

அறையின் மத்தியில் அழகிய கண்ணாடி அலமாரி ஒன்று இருந்தது. அதனுள், பளபளவென்று கறுப்பு