உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47-புதிய தெய்வம் வென்றிடும் வழிதான் விளங்கி டாமலே நின்று கலங்கி யாவரும் துடித்தனர்! எந்தப் பெண்ணைப் பலியாகக் கொடுப்பது? வந்திருக் கின்ற வனிதையர் களுள்ளே இரண்டொரு வர்தாம் கணவரோ டிருந்தனர்! அரண்டும் அலறியும் வந்திடும் போது உறவைத் துணையாய்ப் பிரிந்தவர் தாமே பறந்து வந்தே கோயிலில் பதுங்கினர்! ஒருத்தியை அனுப்பும் உரிமை கூட பொருத்தமாய் அங்கே எவர்க்குமே இல்லை! அதனால் செய்தியை ஆடவர் செவிகளில் மெதுவாய்ச் சொன்னான் அந்த இளைஞன்!