பக்கம்:புது மெருகு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

புது மெருகு

மாட்டிவிடக் கூடாது. நான் கேட்பதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். இனிவார்த்தை பிசகக்கூடாது."

"நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?"

"எப்படிச் செய்தால் நான் அபவாதத்துக்கு ஆளாகாமல் இருக்க முடியுமோ அப்படிச் செய்யச் ....... .......

"நீ கேளாமல் இருக்க முடியாதா?"

"முடியாதே"

அகத்திய முனிவருடைய கோபம் மேலே மேலே படர்ந்ததே ஒழியத் தணியவில்லை. அவருக்குப் பேச வாய் எழவில்லை.அதங்கோட்டாசிரியரும் மௌனமாக இருந்தார். முனிவரது முகத்தைப் பார்த்தால் அங்கேயே அவரைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார் போல இருந்தது. 'இதற்கு என்ன வழி?' என்று ஆசிரியர் யோசிக்கலானார். சிறிது நேரம் கழிந்தது.

"சுவாமி, ஒரு வழி தோன்றுகிறது. கட்டளையிட்டால் விண்ணப்பித்துக் கொள்கிறேன்-" என்று மெல்ல ஆரம்பித்தார்.

முனிவர் இன்னும் கோபக் கடலில் திளைத்திருந்தார். "ஹூம்!" என்று கனைத்தார்.

"சொல்லட்டுமா?"

"சொல்"

"அரங்கேற்றத்தின்போது தொல்காப்பியத்தில் அங்கங்கே குற்றம் கண்டுபிடித்துக் கேள்வி கேட்கிறேன். பல பல கேள்விகள் கேட்டுத் தொல்காப்பியரைத் திணற வைக்கிறேன்."

அகத்தியர் இந்த வார்த்தைகளைக் கவனித்தார்; யோசித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/15&oldid=1548523" இலிருந்து மீள்விக்கப்பட்டது