பக்கம்:புது மெருகு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றுகை

27

பெரிய பூசை நடைபெற்றது. குடிமக்கள் யாவருக்கும் இறைவனுக்கு நிவேதனமான அன்னம் கிடைத்தது! ஆம். பல காலமாக அவர்கள் மறந்திருந்த நெல்லஞ் சோறு தான் அது! சந்தேகமே இல்லை. கண்ணை நம்பாவிட்டாலும் பிறந்தது முதல் பழகி ருசியறிந்த நாக்குக் கூடவா பொய் சொல்லும்? அதோ கோயிலின் முன்னே குவிந்திருக்கும் சிறு நெற்குவியல் கூடப் பொய்யா? கொத்தாகக் கட்டித் தொங்க விட்டிருக்கும் நெற்கதிர் கூடப் பொய்யா?

எல்லோரும் வியப்பே உருவமாகிப் பிரசாதத்தை உண்டார்கள். களி துளும்பும் அகமும், மலர்ந்து விளங்கும் முகமும் படைத்த அவர்களுக்கிடையே பாரியும் கபிலரும் வீற்றிருக்கின்றனர். அருகில் நூற்றுக் கணக்கான கிளிகளும் குருவிகளும் நெல்லையும் வேறு தானியங்களையும் கொரித்துக் கொண்டிருக்கின்றன.தங்கள் குடிமக்களோடு அந்தப் பறவைகளும் விருந்தயர வேண்டும் என்பது கபிலருடைய விருப்பம். கிளிகளையும் குருவிகளையும் பழக்குவதில் அவர் வல்லவர். அவ்வளவு பறவைகளும் அவருடைய ஏவலுக்கு அடங்கி நிற்பன. "பாரி, பாரி" என்று தம்முடைய மழலைப் பேச்சிலே கிளிகள் கொஞ்சுகின்றன.

"பிரசாதத்தில் சில உருண்டைகள் மிச்சம் இருக்கட்டும். கீழே இருக்கிறார்களே, அவர்களுக்கும் அனுப்பலாம். அவர்கள் நம்பால் பகைமை பாராட்டினாலும் நாம் நண்பு பாராட்டலாம் " என்று சொல்லிக் கபிலர் பாரியைப் பார்த்தார்.

சில சோற்றுருண்டைகளை இலையில் பொதிந்து ஓர் அம்பிலே கோத்துப் பாரி வில்லில் வைத்து எய்தான். அடுத்த கணத்தில் நேரே படைத்தலைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/32&oldid=1548627" இலிருந்து மீள்விக்கப்பட்டது