பக்கம்:புது மெருகு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யமன் வாயில் மண்

33

கினான். தன்னுடைய புலமைத் திறத்தைப் புலப்படுத்தினான்.

இளமை முறுக்கோடு அவன் வாயிலிருந்து வந்த தமிழ்க் கவிதை நலங்கிள்ளியின் உள்ளத்தே இன்பத்தைப் பாய்ச்சியது."இவ்வளவு காலமாகத் தாங்கள் இந்தப் பக்கம் வந்ததேயில்லையே" என்றான் நலங்கிள்ளி.

"கூட்டைவிட்டு முதல் முதலாக வெளியேறும் சிறு குருவி நான். இன்னும் தமிழ்நாட்டின் விரிவை உணரும் பாக்கியம் கிடைக்கவில்லை. முதல் முதலாக இந்த அவைக்களத்திலே என் கவிக் குழந்தையைத் தவழவிடுகிறேன். அதனை ஆதரித்துப் போற்றும் செவிலித் தாயைக் கண்டுகொண்டேன். நல்ல சகுனம் இது. இனி நான் ஊக்கம் பெறுவேன்; தமிழ் மன்னர்களை என் கவிதைக் காணிக்கையுடன் கண்டு நட்புப்பூண்பேன். உலகையும் வலம் வருவேன்."

இளம் புலவன் உற்சாகத்தோடு பேசிய பேச்சிலே அவனுடைய உள்ள எழுச்சி பூரணமாக வெளிப் பட்டது. மனிதன் தொடங்கும் முயற்சிகளிலெல்லாம் வெற்றி உண்டாகிவிடுகிறதா? பெரும்பாலும் தோல்வியைத்தான் அவன் காண்கிறான். இந்தப் புலவன் தன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றான். வரிசை யறிந்து பாராட்டும் வள்ளலிடம் முதற் பரிசைப் பெற்றான். அவனுக்கு ஊக்கம் உண்டாகத் தடை என்ன? உலகத்தையும் வலம் வரலாமென்ற பெருமிதம் எழுவதற்கு அந்த ஊக்கமும் பயமறியாத இளமையும் ஆதாரமாக இருந்தன.

புலவர்களுக்குச் சம்மானம் பெரிதல்ல; விருந்தும் பெரிதல்ல. யானைகளையும் குதிரைகளையும் ஆயிரம்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/38&oldid=1548635" இலிருந்து மீள்விக்கப்பட்டது