பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. நால்வகை வாய்மைகள் 1. ஓ பிக்குகளே! துக்கத்தைப் பற்றிய உயரிய வாய்மை இது: பிறப்பிலே வேதனை இருக்கின்றது; தளர்ச்சி வேதனை, பிணி வேதனை, மரண வேதனை, இன்ப கர மா யில்லாதவைகளின் சேர்க்கை வேதனை, இன்ப கரமானவைகளிலிருந்து பிரிதல் வேதனை. கிறை வேறாத ஆசையும் வேதனையானது. சுருங்கக் கூறினால், பற்றுக் காரணமாக எழும் ஐந்து உபா தானக் கந்தங்களுமே வேதனையாயுள்ளவை. 2. ஓ பிக்குகளே! துக்க உற்பத்தி பற்றிய உயரிய வாய்மை இது: _ உண்மையில் இதுதான் வேட்கை-புதுப் பிறவிக் குக் காரணமானதும், புலன்கள் இன்பத்தோடு அங்கும் இங்குமாக அலைந்து இன்பத் தேட்டத்தை நிறை வேற்றிக் கொள்ளத் துாண்டுவதுமான வேட்க்ை: அதாவது (காமம் முதலிய) உணர்ச்சிகளைத் திருப்தி செய்யவோ, எதிர்கால வாழ்வில் ஆசை கொள்ளவோ அல்லது (இந்த வாழ்வில்) வெற்றியடையவோ, கொள்ளும் பேராவல். 3. ஒ. பிக்குகளே! துக்க நீக்கத்தைப் பற்றிய உயரிய வாய்மை இது:

  • கந்தங்கள்-ஸ்கந்தங்கள்; அவை உருவு (ரூபம்), நுகர்ச்சி (வேதனை), குறி (ஸம்ஜ்ளுை), பாவனை (ஸ்ம்ஸ் காரம்), உள்ள அறிவு (விஞ்ஞானம்) என்பவை,