பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புத்தர் போதனைகள் பிக்குகளே! தோற்றம் (பிறப்பு) என்பது என்ன? குறித்த மனிதர்களாகவோ, ஜந்துக்களாகவோ பிறப்பை அடைதல், உற்பத்தியாதல், இறங்கி வருதல், கருவிலிருந்து ஜனித்தல், கந்தங்கள் ஒன்று சேர்ந்து (உருப் பெற்று) வெளித் தோன்றுதல், புலன்களின் உணர்ச்சிகளைப் பற்றுதல்-இதுவே தோற்றம் எனப்படும். பிக்குகளே கருமத்தொகுதி (பவம்) என்பது என்ன? கருமத்தொகுதிகள் மூன்று வகைப்படும்: சுவர்க் கம் முதலிய உலகங்களிலோ, பூவுலகம் போன்ற உலகங்களிலோ, கட்புலனாகாத உலகங்களிலோ, தோன்றுவதற்கு ஆயத் தமாதல். இது பவம் எனப்படும். பிக்குகளே! பற்று என்பது என்ன? பற்றுக்கள் கான்கு வகைப்படும்: ஆசைகளைப் பற்றுதல், கருத்துக்கள் அல்லது கொள்கைகளைப் பற்றுதல், (யக்ளும், பூசை முதலிய) கிரியைகளைப் பற்றுதல், 'கான்' என்ற அகங்காரத்தைப் பற்றுதல்இது பற்று எனப்படும். பிக்குகளே! வேட்கை என்பது என்ன? வேட்கையில் ஆறு தொகுதிகள் உண்டு: உருவத் திலே கொள்ளும் அவா, ஒலியிலே கொள்ளும் அவா, முகர்வனவற்றிலே கொள்ளும் அவா, சுவைகளிலே கொள்ளும் அவா, துரலப் பொருள்களிலே கொள்ளும் அவா, கருத்துக்களிலே கொள்ளும் அவா-இது வேட்கை எனப்படும்.