பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. புத்தர் ஒ. பிக்குகளே! மாநில மக்களிடம் கொண்ட அன்பினாலே, அவர்களுடைய இன்பத்திற்காகவும், ாலனுக்காகவும், தேவர்கள் மனிதர்களின் இன்பத்திற் காகவும், கலனுக்காகவும் ஒப்பற்ற ஒருவர் தோன்று கிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரண ஞான மடைந்து, உயர்நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார். அறிவு ஆற்றல்களினாலே ஒப்பற்ற ஒருவர் இவ் வுலகிலே அவதரித்திருக்கிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரண ஞானமடைந்து, உயர் நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார்." 통 கான் அகங்காரத்தை அழித்து விடுதலை அடைக் துள்ளேன். எனது உடல் புனிதமாகியுள்ளது. எனது உள்ளம் ஆ ைசயற்றுள்ளது. எனது இதயத்தில் உண்மை உறைந்துள்ளது.கான் கிருவான முக்தியைப் பெற்றுள்ளேன். அதனால்தான் என் தோற்றம் சாந்தி கிறைந்திருக்கிறது. என் கண்கள் பிரகாசிக்கின்றன. இப்போது பூமியிலே எனது சத்திய ராஜ்யத்தை அமைக்க விரும்புகிறேன். இருளால் சூழப்பட்டவர் களுக்கு ஒளி யளித்து, மக்களுக்கு கித்திய வாழ்வின் வாயிலைத் திறந்து வைக்க விரும்புகிறேன் 1ான்

  • புத்தர் ஞானமடைந்த பின் உமாகா என்ற துறவி யிடம் கூறியது. -