பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 95 பிக்குகளே! ஆசாரியர் சீடனைத் தமது மகனைப் போலக் கருதவேண்டும், சீடனும் ஆசாரியரைத் தன் தந்தையாகக் கருதவேண்டும். இவ்வாறு அவ்விரு வரும், ஒருவருக்கொருவர் மரியாதையும் அன்பும் கொண்டு, சங்கத்திலே வாழ்ந்து, விகய ஒழுக்கம் வளர்ந்து, பெருகி, முன்னேறச் செய்து வெற்றி பெறுவார்கள்.'"