உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணியன் ஆனந்த விகடன் 13-9-86 இதழ் என் கண்ணிலே பொன்னல் பொறிக்கப்பட்டதாக இன்றும் காட்சி தரு கிறது. அதிலே வந்த என் முதற் கதை 'ஏழைகளின் தோணி'யை இன்று திருப்பிப் படிக்கும்போது, திக்கெல் லாம் புகழும் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றது. தாமிரவர்ணியின் சுலோசன முதலியார் பாலத்திற்குச் சற்றுத் தெற்காக அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தைக் கண்முன் நிறுத்திற்று. அதிலே இன்றும் ஏழை எளியவர் கள் படுத்துறங்கும் காட்சிகள்: தை மாதம் பெளர்ணமி யன்று நெல்லையப்பரும்.காந்திமதியும் திருமஞ்சனமாட வருடத்தில் இரு தினங்கள் தங்குவதற்கு மண்டபம் கட்டிய முன்னேரும், அன்ருடம் ஏழையவர்கள் படுத்துறங்க வழி வகை செய்த பக்தர்களும் வாழட்டும்! ஏழைக்குப் பணியும், வெயிலும் மழையும் தோன்ரு வண்ணம் காத்து நிற்கும் மண்டபத்தில், திடீரென இரவுக் கிரவே, வெள்ளம் பொங்கிக்கொண்டு வந்து விட்டால் மண்டபத்தில் துங்கும் அநாதைகள், மாடிக்குப்போய் தங்கிக்கொள்ள இருப்புச் சங்கிலி ஏணிப் படியுடன் அன்று கிடந்தது; இன்று இருக்கிறதோ, என்னமோ? எதிர்பாரா மல் இரவில்ே தைப்பூச மண்டபத்திலே அகப்பட்ட ஏழை.