உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4506 கம்பன் கல்ை நிலை - . பொய்யை நினைந்து இந்த ஐயன் இங்கே துடித்திருப்பது வையம் அறிந்து உய்ய வந்தது. அரிய கரும நீதிகள் பெரியவன் வாய்மொழிகளில் பெருகி மிளிர்கின்றன. நெடிய சோகத்தால் நெஞ்சம் கலங்கி நிலை குலைந்து புலம்புகின்ற போதும் விபீடண. லுக்குக் கொடுத்த வாக்கைப் பூர்த்திசெய்ய வில்லையே என்று ஆர்த்தியோடு அலமந்திருக்கிருன். சத்தியத்தை நினைந்து தவித்து நின்றுள்ளான். உத்தம உள்ளம் உளைந்து கலங்கி யுள்ளது. மூண்ட துயரங்களை நினைந்து கினைந்து இன்னவாறு இன்ன அழந்து பல வகையிலும் எங்கித் தவித்தவன் மறுபடியும் தம்பி யைத் தழுவி உருகி மறுகிப் பெரிதும் மயங்கி அயர்ந்தான். - தம்பியை ஆர்வத்தொடு புல்லித் தன்னை மறந்தான். இளவலை உழுவலன்போடு கழுவிக்கொண்டு இராமன் உயிர்ப்படங்கியுள்ள பரிதாப நிலையை இது காட்டியுள்ளது. ஐம்பொறிகளும் அலமந்து கலங்கிக் கரணங்கள் குலைந்து மர ခေါ மருவியதுபோல் உணர்வு அடங்கி, உயிர் ஒடுங்கி நின்றது. அங்கிலையினை நோக்கி அமரர் யாவரும் ஆவலித்து அலமந்தனர். கண்டார் விண்னேர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்ருர், கொண்டார் துன்பம் என்முடி வென்னக் குலைகின்ருர், அண்டா ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்ருய் o, உண்டோ உன்பால் துன்பென அன்போடு 53. இராமனது நிலைமையைக் கண்டு தேவர்கள் மறுகி அழு. துள்ள வகையை இது காட்டியுள்ளது. அவ்வாறு பரிந்து శ தவர் பின்பு தெளிந்து தேறிப் பரம நீர்மையை நினைந்து துதித் தார். அவருடைய துதி மொழிகள் அவதார மருமங்களை மருவி வந்தன. அரிய பல உண்மைகளை அவை வெளியிட்டுள்ளன. உன்னே உள்ள படி அறியேம் உலகை யுள்ள திறம் உள்ளேம் பின்னே அறியேம் முன்அறியேம் இடையும் அறியேம் பிறழாமல் கின்னே வணங்கி வகுத்த நெறியில்கிற்கும் அது வல்லால் என்னை அடியேம் செயற்பால? இன்ப துன்பம் இல்லோனே! (1) அரக்கர் குலத்தை வோறுத்து எம் அல்லல்க்ேகி அருளாய் என்று இரக்க எம் மேல் கருனேயில்ை இயையா உருவம் இஃது எய்திப் புரக்கு மன்னர்குடிப்பிறந்து போந்தாய்அறத்தைப்பொறைதிர்ப்பான் காக்க கின்றே நெடுமாயம் எமக்கும் காட்டக் கடவாயோ? (2)