உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1101

இசைபாடல், உலகம் எக்கல் முதலியன கதிரவன் உதயத்தில் இயல்பாக கிகழ்வன ; அவை, ஆடலுக்கு இசைவாய் ஈண்டு இயைந்து கின்றன. கனக் சபையில் நடனக் கிருக்கோலத்தோடு அருள்செய்து கிற்கும் நடராச மூர்த்தியை கினேவில் வைத்துக் கொண்டு இது வனையப்பட்டது.

அகில வுலகங்களும் கனக்குத் திருமேனியாக வுடைய பிர மாண்ட நாயகன் தில்லையில் சிறிய அம்பலத்தில் நடித்துள்ளது அரிய செயல் , அவனது ஆடலுக்கு எங்கும் எல்லையில்லை என்ப தை இங்கே நன்கு சொல்லியிருக்கிரு.ர்.

வேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி மூதண்ட கூடமே மோலியாம்-கோதண்டம் ஒற்றைமா மேரு உமாபதியார் கின்றாடப் பற்றுமோ சிற்றம் பலம், (சிதம்பா மும்மணிக்கோவை, 9)

இறைவனது உருவ நிலையைக் குறித்துக்காட்டி இதில் வினவி யிருக்கும் அழகைப் பார்க்க. வேகண்டம்=மலைகள்.

உலகமெல்லாம் இனிது இயங்கக் கனி நடிக்கும் பாமன் என்க. நடிக்கும்பொழுது சிவக்க சடை அயலெங்கும் பாங் து கிற்கும் ஆகலால் திசைகள் தோறும் பாவியுள்ள செவ்வியகிானங்

களுக்கு அது உவமையாயது.

சூரியனே ச் சிவபெருமானுகவும், அவனிடமிருந்து விரிந்து பாந்துள்ள செங்கதிர்களே அப்பரமனுடைய செஞ்சடையாகவும்

உருவகம் செய்து உதய கிலேயை இவ்விதம் உணர்த்தியருளினர்

விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி, அஞ்ஞாயிறு சூழ்ந்து எரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை, அச்சடைக்கிழ்ச் )சிரிகின்ற காரிருள் போன்றது கண்டம், அக்காரிருட்கீழ்ப்

புரிகின்ற வெண் முகில் போன்றுளதால் எங்தை ஒண்பொடியே

(பொன்வண்ணத்தந்தாதி, 26)

கண்ணுதற் கடவுளது மேனி, சடை, கண்டம், நீ துகளைக் குறித்துக் கூறிய படியிது. சேரமான்பெருமாள் நாயனர் என் ம்ை பெரியார் பாடிய பாசாம். இதன் சொல்லும் பொருளும் அணியமைதியும் நம் கவியுள் வந்து சுவை சுமந்துள்ளன.