பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO + புல்லின் இதழ்கள்

சற்று ஆrரத்தில் உயரமாக அழகானதொரு நாலுகால் மண்டபம், வழிப்போக்கர்கள் வந்து தங்கி இளைப்பாறிச் செல்லுலார்கள். பல சமயங்களில் அங்கே கிராமத்து ஆடுகள்தான் தங்களின் பலதரப்பட்ட வண்ணக் குட்டி களுடன் குவியாகக் குதித்து விளையாடிக் கொண்டும்; இளைப்பாறிக் கொண்டுமிருக்கும்.

வீட்டை விட்டு வெளியேறிய காலத்தில் ஹரி எங்கு சுற்றியும் இந்த மண்டபத்தைததான் தனது புகலிடமாகக் கொண்டிருந்தான். அவன் பாடினாலும், படுத்தாலும், பட்டினி கிடந்தாலும், யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத இந்த சுதந்திரம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் பாகவதர் இந்த மண்டபத்திற்கு வந்துதான் அவனை ஆட் கொண்டார்.

ஊருக்கு நடுநாயகமாய், சிறிய மலையுச்சியில் விளங்கிக் கொண்டிருந்தது சுவாமி நமதஸ்வாமி ஆலயம் , ஆலயத்தைச் சுற்றி உருவான மாட வீதிகள், சிறிய அக்கிரகாரங்கள்: ஆற்றங்கரைத் தெருக்கள், சன்னிதித் தெரு, ஊருக்குள் ஊடுருவி, அங்கொன்றும், இங்கொன்று மாய்ப் பற்பல தொழில் புரிவோர் வசிக்கும் தெருக்கள்: பல பிரிவு மக்கள்.

  • சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!’

என்று முழங்கிய பாரதியின் வேத வாக்கையோ

‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டை செய்தாலும் சோதரர் அன்றோ?’ என்று கேட்ட பாரதியின் அறிவுரையையோ ஏற்றுக் கொள்ளும் பக்குவமுமின்றி - அறிவு அடிமைப் பட்டுக் கிடந்த இந்திய மக்கள்