பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 புல்லின் இதழ்கள்

கதரைத் தவிர வேறு உடை உடுத்த மாட்டார். தம்பூரா கையில் இல்லாத நேரங்களில், அவரது கரங்களில் தக்கிளியோ - சர்க்காவோ சுழன்று கொண்டிருக்கும்.

பாகவதர் ஒரு கொள்கை வைத்திருந்ததார். தன் னுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், இறுதியில் இரண்டு தேசியப் பாடல்கள் பாடாமல், மங்களம் பாட மாட்டார். இதனாலேயே சில பிரமுகர்கள், பெரிய அரசு உத்தியோ கஸ்தர்கள் போன்றவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு அஞ்சி, தங்கள் வீட்டுத் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பாக வதரை அழைக்கப் பயப்படுவார்கள். ஆயினும் பாகவதர் இதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார். அவருக்கு யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலை இல்லை.

  • தைரியமிருந்தால் மேடையிலேயே எனக்கு. விலங்கிட்டு அழைத்துப் போகட்டும். ஜெயிலில் இருக்கிறவர்களுக்காக, யார் அங்கே போய்க் கச்சேரி செய்யப் போகிறார்கள்? ஆனந்தமாய் அவர்களுக்காக நான் போய் பாடுகிறேன்’ என்பார். ஈடு இணையற்ற இசையினாலும், இம்மாதிரியான காரியங்களினாலும் பாகவதர் உள்ளூரிலும், வெளியூர்களிலும் ஏராளமான வர்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தாலும், திடீரென்று மீண்டும் அவர் செய்த ஒரு புரட்சியைக் கண்டு ஊரே ஒன்று கூடிப் பேசியது.

எங்கோ பிறந்த - ஊர் பேர் தெரியாத வேற்று ஜாதிப் பையனை அழைத்து வந்து வீட்டோடு சரி சமானமாக வைத்துக் கொண்டு; அவனுக்கு வித்தையும் சொல்லிக் கொடுக்க அவர் முனைந்த போது - ஊர் முழுதும் கூடிப் கூடிப் பேசினாலும்; பாகவதரின் முகத்துக்கு நேரே நின்று இதைப் பற்றிக் கேட்க யாருக்கும் துணிவு இல்லை.

ஏனெனில் - இது போன்ற ஒரு செயலுக்காக முன்பு ஒரு சமயம் பாகவதரிடம் எதிர்ப்புக் கொடி காட்டித் தோற்றுப் போனவர்கள் அவர்கள். --