பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘104 புல்லின் இதழ்கள்

தினம் சுவாமி மலைக்கு வருகிறார்கள். அவரால் - அவரது இசையின் சிறப்பால் - அந்த சிற்றுாருக்கே எவ்வளவு பெருமை?

சுப்பராம பாகவதரைப் பொறுத்த வரையில்; இசையே அவருக்கு - இறைவன்; அதை ஆராதிக்கிறவர்கள் யாரா யிருந்தாலும் - அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இறைவனின் இசை வடிவங்களே! அவருடைய ஜாதி சங்கீத ஜாதி!

இப்படியொரு கொள்கையையும் அதில் தீவிரப் பிடிப்பும் உடைய பாகவதரிடம் மீண்டும் ஒரு முறை ஹவிக்காக - யாரோ ஊர் பேர் தெரியாத அந்தப் பையனை வீட்டோடு சேர்த்து கொண்டதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க - ஊர்க் காரர்கள் விரும்பவில்லை.

ஏனெனில்

முன்பு, சுந்தரி சம்பந்தப்பட்ட விஷயத்தின் போது பாகவதர் யாரென்பது ஊர் மக்களுக்குப் புரிய வாய்ப் பில்ைைல; எதிர்த்தார்கள் இப்போது

ஹரி விஷயத்தின் போது அவர்கள் பாகவதரைப் புரிந்து கொண்டு மெளனமாகி விட்டார்கள்.

சுவாமி மலையில் நாகரிகம் அடியெடுத்து வைக்கத் துவங்கியிருந்த காலம். மின்சார விளக்கிலும் - ரயில் வண்டியிலும் ஊமைப் படங்களிலும் இருந்த பிரமிப்பு நீங்கிவெள்ளித் திரையில் தமிழ் பேசும், பாடும் படங்கள் வந்த போது, மக்கள் பிரமித்துப் போனார்கள்.

அளவோடு-ஆனால் செழுமையோடு கூடிய ஜனத் தொகை கொண்ட அந்தச் சிறிய கிராமத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை - டூரிங் டாக்கீஸ் என்கிற பெயரில் பெரிய படுதாக்களைத் தூக்கி நிறுத்தி அடித்திருக்கும்