பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புல்லின் இதழ்கள்

களுக்கு அன்னதானமும், விடயாற்றி உற்சவத்தன்று கிராமத்து ஜனங்களுக்குப் பந்தலில் பெரிய சமாராதனையும் நடை பெறுவது வழக்கம்.

இதற்கு ஒவ்வொரு வருஷமும் பாகவதர் முன்னிலையில் உற்சவக் கமிட்டி கூடித் தலைவர்களையும், நிர்வாகக்கமிட்டி அங்கத்தினர்களையும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வருஷ மும் உற்சவத்துக்கான கமிட்டிக்கூட்டம், அன்று மாலை நடைபெற இருப்பதாகக் காரியதரிசி பாபு, பாகவதரிடம் வந்து கூறினார். அதனால்தான் அவர் ஹரியையும் அழைத்துக் கொண்டு திருவிடைமருதுரருக்குப் போக இருந்த திட்டத்தை மாற்ற நேர்ந்தது.

பாகவதர் உள்ளுரில் இருக்கிற நாட்கள் மிகவும் குறைவு. அதனாலேயே அவர் ஊரிலிருப்பதை அறிந்ததும் வழக்கம்போல் கமிட்டிக் கூட்டத்துக்குப் பாபு ஏற்பாடு செய்துவிட்டார். பாகவதர் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த விரும்பவில்லை. கமிட்டி விவகாரங்கள் எல்லாம் முடிந்த பிறகு மறுநாள் காலையில் முதல் வண்டிக்கே பாகவதரும் ஹரியும் திருவிடைமருதுரருக்குப் புறப் பட்டனர்.