பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

அவனது இசைக் கலையையும் உங்கள் அன்புக்கரங்களில் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

அதோ - அவன் மீட்டுகிற தம் பூராவின் சுநாதமும் சுருதியோடு இழைந்து கரையும் அவனது இனிய குரலும் கேட்கின்றன. இந்தத் தெய்வீக இசையில்- இதை இசைப்பவனின் ஞானத்தில், கற்பனைத் திறனில் உங்கள் மனம் நிறைந்தால், அந்த மகிழ்ச்சியில், இசை இன்பத் தில் நீங்கள் உங்களை மறந்து பரவசமடைந்தால்-அந்தப் பெருமை, இப்புதினத்தின் நாயகனான ஹரிக்கும்; இசை யோடு இணைந்த அவனது வாழ்க்கையை உருவாக்கிய பாகவதர், காயத்திரி, சுசீலா, காந்தாமணி, சுந்தரி, வஸந்தி, லகதிமியம்மாள், ஆகியவர்களுக்குமே உரியது. இந்த நிறைவுபெறும் பாத்திரப் படைப்புகளில் எங்கே னும் அபஸ்வரம் ஒலித்தாலும்; கதையின் நடையில்; அதன் விறுவிறுப்பில், ஒட்டத்தில் ஏதேனும் லயம் நழுவி யிருந்தாலும் அந்தக் குறைகள் என்னுடையவையே.

இனியும் உங்களுடன் பேசிக் காக்க வைக்கப் போவ தில்லை. விடிவெள்ளி முளைத்துவிட்டது. காலப் புரவி களைக் கதிரவன் தன் ஒளிமயமான தேரில் இழுத்துப் பூட்டிக் கொண்டிருக்கிறான்; பவனி வர வாருங்கள் சுவாமிமலைக்கு : பாகவதர் வீட்டிற்குப் போய் ஹரியைச் சந்திக்கலாம்.

மந்தைவெளி சென்னை 28 } கே. பி. நீலமணி