பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*130 புல்லின் இதழ்கள்

அவ்வளவு ஆசைப்பட்டு இன்னொரு நாள் கேட்டிருக்கிற போது; அதற்கு நாமும் ஒத்துழைக்க வேண்டியதுதானே நியாயம்?’ என்று காரியதரிசி மிகவும் கண் ணிமாகப் பதில் எழுதிவிட்டார்.

ஆகவே, பம்பாயிலுள்ள மற்றொரு கச்சேரியையும் உடனே ஒப்புக் கொள்ளும்படி பாகவதருக்கு அன்றே தந்தி அடித்து, விவரமாகத் தபால் எழுத வேண்டிய காரியங்களும் இருந்த படியால் ஹரி சுவாமி மலையை விட்டு அசைய முடியவில்லை. மறு நாள்தான் சென்றான்.

ஹரிக்கு லட்சுமியம்மாளிடமும் சரி, சுந்தரியிடமும் சரி, மிகுந்த மரியாதை உண்டு. பாகவதரிடம் எப்படிப் பணிவோடு நடந்து கொள்வானோ, அப்படித்தான், அவர்களிடமும் அவன் நடந்து கொள்வான். சொல்லப் போனால் சுந்தரியிடம் அவனுக்குச் சற்றுப் பயம் உண் டென்று கூடச் சொல்லலாம். சங்கீதத்தில் அந்த அம்மாள் தனக்குச் சமமான யோக்கியதையை உடைய வள்’ என்று தன் குருநாதர் வாயாலேயே சொல்லக் கேட் டிருந்ததனால் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டான்.

ஆனால் லட்சுமியம்மாளிடம் அவனுக்குப் பெற்ற தாயைப் போல உரிமையும் அன்பும் அதிகம். அதனால் அங்கே பயமும் கட்டுப்பாடும் இல்லை. அதேபோலத்தான் ஹரியிடம் சுசீலாவும் வசந்தியும் நடந்து கொண்டனர். சுசீலாவுக்கு அவனிடம் உரிமை அதிகம். தான் இடுகிற கட்டளையை நியைவேற்ற அவன் கடமைப் பட்டவன் என்ற நினைப்பு, தங்கள் வீட்டோடு இருந்து சாப்பிட்டு வித்தைக் கற்றுக் கொண்டவன் என்ற எண்ணம் அவளுக்கு. அதனால் ஹரியிடம் அவளுக்கு மதிப்புக்குப் பதில் அலட் சியந்தான் மேலோங்கி நின்றதோ!-அவள் உள்ளத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது.

வசந்தியோ, ஹரியைத் தெய்வமாக மதித்து வழிபட் டாள். அவனுடைய வசீகரத் தோற்றமும் அடக்கமும்