பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்கவா? 147

சரி, ஆண்டவன் விருப்பப்படியே நடக்கட்டும். அதற்கு மேல் நாம் என்ன செய்ய? இந்த இரண்டு நாளைக்கும் நீ எனக்கு ஒன்றும் செய்யவேண்டாம்; இங்கே இருப்பவர்கள் கவனித்துக் கொள்வார்கள். கச்சேரிக்கு வேண்டியதை எல்லாம் தயார் பண்ணிக் கொள்’ என்றார்.

வசந்தி ஹரியை ஒரக் கண்ணால் ஒரு முறை பார்த் தாள். பாகவதர் உடம்பு சரியில்லாமல் ஆனதிலிருந்து வசந்திக்கும் சுசீலாவுக்கும் பாடம் நின்று போய் விட்டது. அதன் பிறகு ஹரி திருவிடைமருதூருக்குப் போகவில்லை. வசந்தியாலோ ஹரியைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது போலிருந்தது. அதற்கேற்ப அம்மாவின் உத்தரவும் அநுகூலமாக இருந்தது. சுசீலாவின் கண் காணிப்பைப் பற்றியோ அலட்சியத்தைப் பற்றியோ அவள் லட்சியம் செய்யத் தயாராக இல்லை.

ஹரி மாடிக்குப் போனதும் சிறிது நேரத்துக்கெல்லாம் வசந்தியும் மாடிக்குச் சென்றாள். ஹரி பாடுவதற்காக உட்கார்ந்தான். அவளைப் பார்த்ததும் அவனுக்கு வியப் பாக இருந்தது.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இங்கேயும் வந்து விட்டாளே என்றா? உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும். அதை அப்புறம் சொல்கிறேன். முதலில் தம்பூராவை இப்படிக் கொடுங்கள். நான் போடுகிறேன்; பிறகு நீங்கள் பாடலாம்’ என்று கையை நீட்டினாள்.

ஹரிக்கு உடம்பு முழுவதும் குப்பென்று வியர்த்து விட்டது. வர வர வசந்தியின் துணிச்சல் பெருகிக் கொண்டே போகிறதே! இன்றைக்கு என்ன, வாட்ச்மென் சுசீலா ஸி. ஐ.டி. வேலையை விட்டு ஒடிப் போய் விட்டாளா? எங்கே அவளை இன்னும் காணவில்லை? வசந்தி வந்தது தெரிந்தால் இதற்குள் நூறு தடவை குறுக்கும் நெடுக்குமாக வந்திருப்பாளே! என்று ஆச்சரியப்பட்டான்.