பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்க வா? 153

தன்னை உற்சாகப்படுத்தி அவள் கூறிய ஆறுதலான வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப மனத்துக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டான். அவன் மனம் சுய நலத்தை நாடி மாடிக்குச் செல்வதை ஒப்பவில்லை. கொல்லையை நோக்கி நடந்தான். அவனைக் கண்டதும் காயத்திரிக்கு ஆச்சரியமாக இருந்தது.

பாடப் போகச் சொன்னேன்; இங்கே வந்து நிற்கிறாயே. என்ன விசேஷம்?’ என்று கேட்டாள்.

இன்றைக்கு நான்தான் பால் கறக்கப் போகிறேன். அதற்குள், தேய்த்த பாத்திரங்களை யெல்லாம் இங்கே கொடுங்கள். உள்ளே கொண்டு போய் வைக்கிறேன்.'” என்றான்.

கொஞ்சம் முன்தானே சொன்னேன், இதெல்லாம் என்வேலை என்று? நாளைக்குப் பெரிய சங்கீத வித்வா னாகப் போகிறவன் இப்படிப் பாத்திரம் அலம்பவும் மாடு கறக்கவும் ஆசைப்படலாமா?’ சிரித்துக் கொண்டே கேட்டாள் காயத்திரி.

பரவாயில்லை. நான் பரம்பரைச் சங்கீத வித்வானாக இருந்தால் நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். நான் உங்களால் வித்துவானாக உருவாக்கப்பட்டவன். அந்த நன்றியைக் காட்டாமல் போவி கெளரவம் கொண்டாட நான் விரும்பவில்லை. அது எனக்கு வேண்டவும் வேண்டாம். உதவிக்கு வருகிறவனைத் தடுக் காமல் செம்பைத் தேய்த்துக் கொடுங்கள். இன்று நான் தான் பால் கறக்கிறேன்.

இத்தனை நாள் சுசீலாவால் வெறும், திட்டோடும் வசவோடும் இருந்தது. இன்று உன் உடம்புக்கு உதையும் கேட்கிறது போலிருக்கிறது.’

ஹரி ஒன்றும் புரியாமல் ஒரு கணம் விழித்தான். பு. இ.-10