பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 183.

பாகவதர் வண்டியிலிருந்து இறங்கி அப்படியே ஒடிச் சென்று ஹரியைக் கட்டிக் கொள்ள மாட்டோமா என்று தவித்த jo .

நாகசாமி பதறிப் போய், ** L , L G, உங்களுக்கு நல்ல உடம்பு இல்லை. அழாதீங்க. உங்களை நான் இங்கே அழைத்து வந்ததே தப்பு’ என்று புலம்

பினான்.

“நாகசாமி, நான் அழவில்லையடா; இது ஆனந்தக் கண்ணிர். எனக்கு ஒன்றும் வந்துவிடாது. இந்தப் பாட்டைக் கேட்க என்னை இங்கே கொண்டுவந்த உனக்கு நான் கோடிப் பொன் கொடுத்தாலும் ஈடாகாது. என்னை நீ இங்கே கொண்டுவராமல் இருந்தால்: இந்த ஆனந்தத்தை நான் எந்த ஜன்மத்தில் அநுபவிக்க முடியும்?’ என்று அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும்போது, செஞ்சுருட்டியில் ஒரு கிருதியை ஹரி பாடிக் கொண்டிருந்தான்.

“ ‘புல்லாய்ப் பிறவி தரவேணும் கண்ணா, புனிதமான பலகோடிப் பிறவி தந்தாலும் பிருந்தாவன மதிலொருபுல்லாய்ப் பிறவி தரவேணும்’

இந்தப் பாட்டைப்பாடி முடிப்பதற்குள் ஹரி கண்ணனை யும் ராதையையும், எண்ணற்ற கோபியரையும் அவன் ரசிகர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி; சுவாமிமலையையே பிருந்தாவனமாக்கி விட்டான்.

தேவர்கள் பூமாரி பொழிவதுபோல் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை முட்டியது.

பாகவதர் வெகுவாகச் சோர்ந்து போனார். உடல் நிலைக் கோளாற்றினால்; அவரால் எந்த உணர்ச்சியையுமே அளவோடுதான் ஏற்றுக் கொள்ளவோ அநுபவிக்கவோ முடிந்தது. நாகசாமியிடம் கூறியது போல் உண்மை