பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புல்லின் இதழ்கள்

கொண்டோமோ அதையே ஹரிக்கும் செய்வதாக ஒப்புக் கொண்டார்.

பிறகு காரியதரிசி, “ஹரி இவ்வளவு பிரமாதமாகப் பாடியதுபற்றி ஊரே புகழ்கிறது. ஆனால் திருஷ்டி பரிகாரம் போல் இப்படி ஒர் அசந்தர்ப்பம் நேர்ந்துவிட்டது’ என்று வருத்தம் தெரிவித்தார்.

உடனே பாகவதர், போனால் போகட்டும்; நம் முடைய பொருளானால் தானே கிடைக்கிறது’ என்று சமாதானம் கூறினார்.

-நெக்லெஸ் எங்கேயும் போய்விடாது. கலெக்டர் வந்துபோன இடமாயிற்றே. நேற்றிரவே போலீஸ்காரர்கள் எவனோ ஒருவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். யாரோ சிங்கப்பூர் பக்கிரியாமே கொள்ளிடக் கரையில், அவனிடந்தான் நகை இருக்கிறதாம். ஸ்டேஷனில் கட்டி வைத்து அடிக்கிற அடியில் நகையைக் கக்கிவிட வேண் டாமா? எப்படியும் நகை கிடைத்துவிடும். கவலை வேண் டாம்’ என்று கூறியபோது ஹரிக்கு அப்படியே பூமி தலை

கீழாகச் சுழல்வது போலிருந்தது.

கையில் இருந்த புதிய நோட்டுக்களையே பார்த்துக் கொண்டிருந்த பாகவதர், ஹரியின் பசுமையான எதிர் காலம் அதில் பளபளத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். வேலூர்க்காரரும் கருர்க்காரரும் ஹரியின் கச்சேரிக்காகக் கொடுத்துவிட்டுப் போன முன்பணமே அது.

‘இதுதான் ஹரி கச்சேரிக்காக வாங்கும் முதல் அட்வான்ஸ். இனிமேல் இவை போன்ற வாய்ப்புக்கள் அவனுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவன் rேமமாக இருக்க வேண்டும்’ என்றே பாகவதர் இறைவனைப் பிரார்த்தித்தார்.

ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாக இருந்த வனது குரலை எனக்குக் காட்டி இறைவன் உலகில்