பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 புல்லின் இதழ்கள்

அப்பா!’ என்று அழைத்த அவனது குரலைக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான் பெரியசாமி. ஆனால் படுக்கையில் கிடந்த முனியம்மாள்தான் ஹரியைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து, * *6. ” கண்ணப்பா, இப்படி என் பக்கத்திலே வந்து உட்காரு. உன்னெப் பார்த்து எம்மாம் நாளாச்சு! எங்களை எல்லாம் ஒரே முட்டா மறந்துட்டியே!’ என்று அழைத்தாள்.

ஹரி ஒரு கணம் வியப்புற்றான்.

கடுகடுப்பும் கோபமும் குரோதமும் கொந்தளித்த அந்தக் குரலில்தான் இப்போது எத்தனை அன்பு! முனியம்மாளின் பழைய குரல் எங்கே? உருவத்தில்தான் எத்தனை மாறுதல் தெருக்கூத்தில் ராணி வேஷம் போட்டு சிம்மாசனத்தில் உட்கார வைக்கலாம் போல இருந்த அழகும்; கட்டுமஸ்தான உடலும் எங்கே போய் விட்டன?

உங்களுக்கு என்ன உடம்புக்கு? ஏன் இப்படி ஒரே யடியாக இளைத்துத் துரும்பாய் போய்விட்டீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான் ஹரி.

இனிமே இந்த உடம்பு துரும்பாத்தான் ஏன் தம்பி இருக்கணும்? ஒவ்வொருநாளா எண்ணிக்கிட்டே தான் இருக்கேன். ஆனால் அது என்னை ஏமாத்திட்டுப் போய்க் கிட்டே இருக்கு. இப்பனாச்சும் உனக்கு எங்க ஞாபகம் வந்து பார்க்க வரணும்னு தோணிச்சே! அதுவே எனக்குப்போதும். சின்ன வயசிலே உன்னை நான் ரெம்பக் கொடுமைப் படுத்திட்டேன். விறகுக்கட்டையாலே அடிச்சு வீட்டை விட்டுத் தொரத்தினேன். அந்தப் பாவத்துக்குள்ள பலனையும் நான் நல்லா அநுபவிச்சுட்டேன். ஆனால் இப்பக்கூட எனக்குத் தோணுது: நானா உன்னை அப்படிச் செய்யல்லே. நீயும் இங்கேயே இருந்தால் உங்க அப்பனைப் போலே கழுத்து ஆட்டங்கண்டாக்கூட லைட்டைக் கீழே