பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 புல்லின் இதழ்கள்

சமயம் வந்தால்; என் பொறுப்பு என்ன என்று எனக்குத் தெரியும். இப்போது அந்தப் பேச்லெல்லாம் வேண்டாம். ஐயா வீட்டு நகையைப் பற்றி ஏதாவது இருந்தால் பேசு. இல்லாவிட்டால் நான் வருகிறேன்.’

அ1 இப்படி ரொம்பப் பேரு பின்னாலே கொடுக் கிறவங்க. பணத்தைப் பத்திப் பேசினவுடனே நைசா நழுவப்பாக்கிறியே, நீயா கொடுக்கப் போறவன்? உன் மனசிலே நல்ல எண்ணம் இருந்தா, சம்பாதிக்கிற காலத் திலேயாவது கொடுகிகிறன்’னு கையிறே அடிச்சிருக்க

மாட்டியா?’ என்றான் பக்கிரி.

உடனே ஹரி, இந்தா மாமா, என் மனத்திலே இருக்கிற எண்ணம் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி நான் விண்டு காட்ட முடியாது. ஆனால் உனக்காகநான் அறியாத என் தாயின் மீது ஆணை இடுகிறேன்: இந்தக் குடும்பத்தை மறக்க மாட்டேன். போதுமா? சித்தியையும் அவளுடைய குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. இனி மேலாவது சீக்கிரமா நெக்லெஸைக் கொடு மாமா. நான் எனக்காக அவசரப் படவில்லை; எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதை நீ இன்னும் அறியாமல் இருக் கிறாயே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்று ஹரி கூறிக்கொண்டு வந்தபோதே பக்கிரி அவன் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண் டான்.

‘தம்பி, அந்தப் பொண்ணு உங்க ஐயா வீட்டுப் பொண்ணுன்னு முதல்லேயே தெரிஞ்சிருந்தா, கூட்டத் திலே நோட்டம் பார்த்துக்கிட்டிருந்தப்பவே திருட்டுக் களுதையைக் கன்னத்திலே அறைஞ்சு துரத்தியிருப்பேன். பாவிப் பசங்க! எங்கேயோ இருந்த என்கிட்ட வந்து, அண்ணே, ஏதோ ஜமின்தார் வீட்டுப் பொண்ணு மாதிரி