பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புல்லின் இதழ்கள்

என்ன கண்ணப்பா, கோபித்துக் கொள்கிறாயே! டவுனுக்குப் போயிருக்கிறான் என்று சொன்னால் புதுச் சேரியா பம்பாயா என்று கிண்டல் செய்கிறாயே!”

-டவுனுக்கு எதற்காகப் போயிருக்கிறான்? விலை விசாரிக்கவா, இல்லை, விற்றுக் காசாக்கவா?’’

கண்ணப்பா, உனக்கு இன்னும் சிறுபிள்ளைத்தனம் போகவில்லை. நகை எங்கேயும் போய்விடவில்லை. கவலைப் படாதே. வீட்டிலிலேயேதான் இருக்கிறது. அவன் மனைவியிடம் விஷயத்தைக் கேட்டுக்கொண்டு தான் வந்திருக்கிறேன். நடுச் சாமமானாலும் அவன் வந்ததும் நகையைக் கொண்டு வந்து கொல்லையில் போட்டுவிடுகிறேன். நீ உன் செளகரியப்படி இரவிலோ காலையிலோ கண்டெடுத்துக்கொள். ஆனால் பொழுது விடிந்ததும் போலீஸில் புகாரை வாபஸ் வாங்க மட்டும் மறந்து விடாதே. அப்பொழுது நான் வரட்டுமா? போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது.’

அது இருக்கட்டும்; நீ இருட்டிலே நகையைக்கொண்டு வந்து சாணத் தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனால் அதை யார் தேடிக் கண்டுபிடிக்கிறது?’’. ஹரி கவலையோடு கேட்டான்.

‘சரி தம்பி, நான் ஒன்று சொல்லுகிறேன். கேட் கிறாயா?’ என்று பக்கிரி ஹரியைத் தன் அருகே இழுத் துக் காதோடு ஏதோ கிசுகிசுத்தான். உடனே ஹரி, “அதுதான் சரி. அப்படியே செய். ஆனால் உன்னை நம்பலாமா? சொன்னபடி செய்யாமல் ஏமாற்றிவிட மாட் டாயே?’’ என்று கேட்டு முடிக்குமுன், ‘உங்கப்பன் ஆணை. சத்தியமாக நம்பு. விட்டேன், விட்டேன் போதுமா?’ என்றான்.

‘உங்களுக்கெல்லாம் சத்தியம் ஒரு கேடு. என் அப்பன் செத்தால் என்ன, இருந்தால் உனக்கென்ன?’ என்று