பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 புல்லின் இதழ்கள்

கல்யாணியைப் போல நான் என் ஆயுளில் கேட்டதில்லை’ என்றாள். -

உடனே ஹரி, போதும், போதும். நீங்களே என்னை இப்படியெல்லாம் கேலியாகப் பேசினால் நான் என்ன சொல்லமுடியும்? இதே கல்யாணியை நான் எப்போ தாவது வீட்டில் பாடிக்கொண்டிருக்கும் போது ஐயாவே என் அருகில் வந்து, நீ இப்போது பாடியதைச் சுந்தரி அருகில் இருந்து கேட்க வேண்டும். அவளுக்கு கல்யாணி ராகம் என்றால் உயிர். அவளைப்போல் அந்த ராகத்தை என்னால்கூடப் பாட முடியாது. அவளுடைய பாட்டைக் கேட்டால் பட்ட மரமும் துளிர்க்கும்’ என்று கூறக் கேட் டிருக்கிறேன். அப்படியிருக்க, நீங்களா என் பாட்டைப் புகழ்வது?’ என்று கூறிக்கொண்டிருக்கும் போது வளந்தி தம்பூராவை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

ஹரி வசந்தியிடமிருந்து தம்பூராவை வாங்கித் துல்லி யமாகச் சுருதி சேர்த்துக்கொண்டு சுந்தரியைப் பார்த்து, ‘'நான் இன்று உங்களிடம் ஒன்று கேட்கலாமென்று நினைக்கிறேன். கேட்கவா?’ என்று கேட்டான்.

“ “ TGrgor இன்றைக்கு அம்மாவிடம் பேசுவதற்கே இத்தனை பீடிகை?’ என்று சிரித்துக்கொண்டே கேட் டாள் வசந்தி.

“ உனக்கு அம்மாவாக இருக்கலாம். ஆனால் அவர் களுடைய வித்தைக்கு நான் மதிப்புக் கொடுத்துத் தானே < வேண்டும். அம்மாவின் பாட்டைக் கேட்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை இங்கே வரும் போதெல்லாம் பாடிக் கேட்க வேண்டுமென்று எண்ணியே வருவேன். ஆனால் ஒவ்வொரு சமயமும் கேட்க அதற்கான துணிவில்லாமலே சென்று விடுவேன்’ “ என்று ஹரி கூறும் போதே, ஆனால் இன்று துணிந்து