பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 புல்லின் இதழ்கள்

போல், குளத்தின் நடுவிலிலிருந்து ஹரி இன்னிசை அலை யெழுப்பிக் கேட்போரைப் பரவசத்தில் ஆழ்த்தினான். மெய்ம்மறந்து பாடிய ஹரி எதேச்சையாகத் திரும்பிய

போது ; தெப்பத்தில், பெண்கள் வரிசையில் காந்தா மணியும் அவள் தாயாரும் அவனையே பார்த்த வண்ணம் கச்சேரியை ரசிப்பதைக் கண்டான். இதைச் சற்றும்

எதிர்பாராத ஹரி வியப்புடன் கச்சேரியைத் தொடர்ந் தான். இதே போல் தான் சற்றும் எதிர்பாராமல் அன்று அவனுடைய அரங்கேற்றக் கச்சேரிக்குக் காந்தாமணியும், அவள் தாயாரும் முன் வரிசையில் வந்து உட்கார்ந்து கொண்டு அவனை வியப்பில் ஆழ்த்தினார்கள்.

வித்தையை யாசித்துத் தாயும் மகளுமாகத் தன் குருநாதரைத் தேடி வந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதும் அவன் நினைவில் மின்னல் போல் தோன்றி மறைந்தன.

அமைதி தவழும் காந்தாமணியின் சாந்தமான முகமும் ; அவளுடைய இசை ஆர்வமும் அவனை உற் சாகப் படுத்துவது போலிருந்தது.

அந்த உற்சாகத்தினால்தானோ என்னமோ - ஹரி தன் திறமையை எல்லாம் காட்டி தெய்வ சன்னிதியில் தேனினுமினிய தன் இசையால் அனைவரையும் மெய்ம் மறக்கச் செய்தான்.