உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 புல்லின் இதழ்கள்

உங்கள் பாட்டைப் பற்றியேதான் பேசிக் கொண்டிருந்தாள். இன்று சாயங்காலம் பிருகதீசுவரர் கோவிலில் கச்சேரி இருக்கிறதல்லவா? என்று காந்தாமணியின் தாயார் கூறிய போதே ஹரி இடைமறித்து, ஆமாம், அதுதான் சாப்பிட்டுவிட்டுச் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலா மென்றிருந்தேன். நீங்களும் வந்தீர்கள்’ என்றான்.

“ஆமாம்...ஒய்வு எடுத்துக்கொள்ளுகிற நேரமாயிருக்கும் என்று காந்தாமணியிடம் ஆன மட்டும் சொல்லிப் பார்த் தேன். உன்னைப் பிடிவாதமாக “அனுப்பிவைத்து விட்டாள்’ என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் காந்தாமணியின் தாயார் கூறினாள்.

“பரவாயில்லை, சும்மாச் சொல்லுங்கள்’.

“ஒன்றுமில்லை. இப்போது உங்களை எப்படியாவது கையோடு வீட்டுக்கு அழைத்து வரவேண்டுமென்று பாப்பா எனக்கு உத்தரவு போட்டாள். இரவு, கோயில் கச்சேரி முடிந்ததும், நீங்கள் அப்படியே ரெயிலுக்குப் போய்விடுவீர் களாம். என்னை வீட்டில் இருக்க விடாமல் துரத்தி விட்டாள். தயவுசெய்து இப்போது என்னுடன் வீட்டுக்கு ஐந்து நிமிஷம் வந்துபோகச் செளகரியப்படுமா?’ என்று அன்போடும் பணிவோடும் கேட்டாள்.

‘முடியாதே’ என்று இழுத்தான் ஹரி.

  • சரிதான், இதைப் போய் நான் அவளிடம் சொன் னால் என்னை கொன்றுவிடுவாள். அவளுடைய பிடிவாதம் உங்களுக்குத் தெரியாது.’

சரி, நாளைக் காலையில் கார் அனுப்புங்கள், வருகிறேன். நான் இரவு கச்சேரி முடிந்ததும், ரெயிலுக்குப் போகப் போவதில்லை. நாளை திருச்சி தேவர் ஹாலில் ஒரு கச்சேரி இருப்பதனால், காலையில் இங்கிருந்துதான் திருச்சி போகிறேன்’ என்றான் ஹரி.