பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 புல்லின் இதழ்கள்

சுட்டிக் காட்டிக் காந்தாமணி பெரிதாகக் குறைப்பட்டுக் கொண்டாள். ஆனால் அதற்கெல்லாம் ஹரி தக்க பதில் கூறி அவர்களைச் சமாதானப் படுத்தினான்.

“குருநாதருக்குத் தெரியாமல் என் ஆயுளில் இதுவரை நான் எந்தக் காரியத்தையும் செய்தவன் அல்ல. ஆனால் உங்களுடைய அன்பையும், காந்தாமணியின் இசை ஆர்வத் தையும் என்னால் ஒதுக்கித் தள்ளமுடியாமல்தான்; நான் இந்தக் காரியத்துக்கு உடன் பட்டேன்’ என்று ஹரி கூறிய போதே காந்தாமணியின் தாய் குறுக்கிட்டு, ‘ஆமாம், ஆமாம்; எங்களுக்குக் கூட ஒரே கவலையாகத்தான் இருந்தது. ஊருக்குப் போய் யோசித்துச் சொல்லுகிறேன் என்று கூறிவிட்டீர்களே; அங்கே போனால் பாகவதர் என்ன சொல்கிறாரோ என்ற பயந்தான். உங்களையும் தடுத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று நானும் காந்தா மணியும் அம்பாளை வேண்டிக்கொண்டே இருந்தோம்’ என்று ஒரே மூச்சில் கூறி நிறுத்தினாள்.

“நீங்கள் கவலைப்பட்டதும் நியாயம்; அத்துடன் வேண்டிக் கொண்டதும் வீண் போகவில்லை. நான் என் குருவிடம் உண்மையைக் கூறி ஒரு வேளை அவர் என்னைத் தடுத்துவிட்டால், பிறகு என்னால் அவருடைய வார்த் தையை மீறிக் கொண்டு வர இயலாது. ஆகையால் காந்தாமணியைப் பெரிய மிராசுதார் வீட்டுப் பிள்ளையாக -கல்யாணராமனாக்கி அவரிடம் அநுமதி கேட்டேன். உங்கள் பிரார்த்தனை பலன் தந்துவிட்டது. வந்து விட்டேன்’ என்று ஹரி கூறினான்.

எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டதற்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்’ என்று காந்தாமணி நன்றி தெரிவித்தாள்.

ஹரி எதையோ நினைத்துக் கொண்டவன் போல், ஆமாம், உங்களிடம் வந்ததுமே ஒன்று கேட்க வேண்டு