பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முடிவு 273,

காந்தாமணி பழைய பாட்டுப் புத்தகத்தை எடுத்து நீட்டினாள். அதில் வரிசைப்படி அட்டவணையில் இருந்த ராகங்களின் பெயர்களைப் பார்த்துவிட்டுப் புதிய வர்ணம் ஒன்றின் பல்லவியை எழுதி அவள் கையில் கொடுத்தான்.

அதை அவன், இரண்டு மூன்று முறை தம்பூராவை மீட்டிக் கொண்டே பாடிக் காண்பித்தான். காந்தாமணி மறு தடவை ஹரி சொல்லிக் கொடுத்ததை அப்படியே துளியும் அப்பழுக்கின்றிப் பளிச்சென்று பாடினாள்.

அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. பிறகு அநுபல்லவியையும் சிட்டாஸ்வரத்தையும் சொல்லிக். கொடுத்தான். அதைப் பாடம் செய்யச் சொல்லிவிட்டுக் காந்தாமணியைப் பழைய வர்ணம் ஒன்றைப் பாடச் சொன்னான்.

அவள் கணிரென்ற குரலில் கானடா வர்ணத்தை

இரண்டு காலம் பாடி நிறுத்தினாள்.

ஏதாதது ஒரு ராகம் பாடிக் கீர்த்தனை பாடு

காந்தாமணி உதட்டைப் பிதுக்கினாள்.

ஏன்?”

ராகம் பாட வராதா?’’

ஊஹாம்.’

அதைச் சொல்வதற்கென்ன? கீர்த்தனை பாடு.”

இரண்டு நாள் கச்சேரியிலும் ஹரி பாடிய ஹரிஸ். மரனே மாடோ நிரந்தர’ என்னும் அதே கீர்த்தனையைக் காந்தாமணி மிகவும் அழகாகப் பாடினாள். அதைக்கேட்டு அவன் பிரமித்தே போனான். தன்னைவிட மிகவும் அழகா